ப்பா.. நவரசமும் வழிந்து ஓடுது.. சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ்னு பிரிச்சு மேஞ்சிருக்காங்க!

சென்னை: நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ள நவரசா டீசர் வெளியாகி உள்ளது.

ஒன்பது விதமான நவரசங்களையும் ஒன்பது கதைகளுடன் சொல்ல வருகிறது இந்த நவரசா ஆந்தாலஜி.

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், ரேவதி, அரவிந்த் சாமி, அதிதி பாலன், பார்வதி, பாபி சிம்ஹா என ஏகப்பட்ட நடிகர்களும் 9 டாப் இயக்குநர்களும் இணைந்து உருவாக்கி உள்ள தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக இந்த நவரசா உள்ளது.

நவரசா டீசர் ரிலீஸ்

நவரசா டீசர் ரிலீஸ்

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் முன்னணி இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், பிரியதர்ஷன், வசந்த், அரவிந்த் சாமி, பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், சர்ஜுன், ரதீந்திரன் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கி உள்ள நவரசா டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

சிரிக்கும் சிங்கம்

சிரிக்கும் சிங்கம்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி உள்ள கிட்டார் கம்பி மேல் நின்று குறும்படத்தில் நடிகர் சூர்யா நவரசா ஆந்தாலஜியில் நடித்துள்ளார். நவரசா ஆந்தாலஜி சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறாமல் நடிகர்களின் நவரச முக பாவணைகளை கொண்டு உருவாகி உள்ள வித்தியாசமான இந்த டீசரில் முதல் ஆளாக சூர்யா சிரித்தபடியே என்ட்ரி கொடுக்கிறார்.

மிரட்டும் பிரகாஷ்ராஜ்

மிரட்டும் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு நடிக்க கற்றுத் தர வேண்டுமா என்ன ஒவ்வொரு முக பாவணைகளையும் காட்டி மனுஷன் என்னம்மா பின்னி எடுக்கிறாருன்னு பாருங்க.. ஏற்கனவே நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் படத்தில் கெளரவக் கொலைகார அப்பாவாக மிரட்டி இருந்தார். இந்த ஆந்தாலஜியில் என்ன செய்ய காத்திருக்கிறாரோ?

மயக்கும் விஜய்சேதுபதி

மயக்கும் விஜய்சேதுபதி

ஸ்க்ரீனில் வந்த அடுத்த நொடியே கண்களாலும் புருவத்தாலும் வித்தைக் காட்டி ரசிகர்களை பார்த்த மாத்திரத்திலேயே மயக்கி விடுகிறார் நடிகர் விஜய்சேதுபதி. இவரும் தொடர்ந்து ஏகப்பட்ட ஆந்தாலஜி படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். பிஜாய் நம்பியார் குறும்படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

அருவியா கொட்டுது

அருவியா கொட்டுது

அருவி, விஜய்சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி, பிருத்விராஜ் உடன் கோல்ட் கேஸ் உடன் கலக்கி வரும் நடிகை அதிதி பாலன் இந்த ஆந்தாலஜியில் தனது அருவியான நடிப்பை கொட்டி இருப்பார் என்பதற்கு உதாரணமாக இந்த சின்ன டீசரிலேயே அவரது எக்ஸ்பிரஷன் பட்டையைக் கிளப்புகிறது.

குங்குமத்தை அழிக்கும் ரேவதி

குங்குமத்தை அழிக்கும் ரேவதி

பாவக் கதைகள் ஆந்தாலாஜியிலும் இதே சிகப்பு கலரை வைத்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சுட்டிக் காட்டி இருந்தனர். நவரசா ஆந்தாலஜியில் குங்குமப் பொட்டு வைத்திருக்கும் ரேவதி அந்த குங்குமப் பொட்டை அவரே அழிப்பது போல காட்சி இருப்பதால் பொல்லாத கணவரை போட்டுத் தள்ளுவது போல ஏதாவது காட்சி இருக்குமா? என்கிற கோணத்திலும் ரசிகர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.

எப்போ ரிலீஸ்

மேலும், சித்தார்த், பார்வதி, பாபி சிம்ஹா என பலரது முக பாவணைகளும் வெறித்தனமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த நவரசா ஆந்தாலஜி படம் வெளியாகிறது. இதன்மூலம் வரும் வருமானத்தை கொரோனா காலத்தில் சினிமா துறையில் கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு கொடுக்க உள்ளதாக மணிரத்னம் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X