இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்... பட்டியலை பாருங்கள்!

வெகு நாட்கள் கழித்து இன்று ஒரே நாளில் ஒன்பதி திரைப்படங்கள் ரிலீசாகின்றன.

Recommended Video

இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள்...பட்டியலை பாருங்கள்!- வீடியோ

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஒன்பது திரைப்படங்கள் வெளியாகின்றன.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை வெள்ளிக்கிழமை என்றாலே கொண்டாட்டம் தான். வாராவாரம் ஏதாவதொரு திரைப்படம் ரிலீசாகும். ஆனால் சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக பல படங்கள் ரிலீசுக்கு ரெடியாகியும், திரைக்கும் வராமல் திணறின.

Nine tamil films releasing today

இதனால் ஸ்டிரைக் முடிந்ததில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் வாராவாரம், இத்தனை படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்கு ஏற்றார் போல் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. பெரிய பட்ஜெட் படங்களுடன் சிறுபட்ஜெட் படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசாவதால், சில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுக்கிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று மொத்தம் ஒன்பது படங்கள் திரைக்கு வருகின்றன. ஆர்யாவின் கஜினிகாந்த், தம்பி ராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடித்துள்ள மணியார் குடும்பம், கிஷோர் நடித்துள்ள கடிகார மனிதர்கள், காட்டுப்பய சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, அரளி, கடல் குதிரைகள், நாடோடி கனவு, உப்பு புளி காரம் ஆகிய படங்கள் இன்று ரிலீசாகின்றன.

Nine tamil films releasing today

இதில் கஜினிகாந்த், மணியார் குடும்பம், கடிகார மனிதர்கள், காட்டுப்பய சார் இந்த காளி ஆகிய படங்களுக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும், கஜினிகாந்த், மணியார் குடும்பம் ஆகிய இரண்டு படங்களுக்கு கிடைத்த அளவுக்கு மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கம் இது போன்று ஒரே நேரத்தில் இத்தனை சிறுபட்ஜெட் படங்களை ரிலீசுக்கு அனுமதிக்கக் கூடாது என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

இத்தனை படங்கள் இன்று ஒரேநாளில் வெளிவர காரணம் என்னவென்றால், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 ரிசீலாகிறது. அதேநாளில், இசையமைப்பாளர் யுவன் தயாரித்திருக்கும் பியார் பிரேமா காதல் படமும் வெளியாகிறது. மேலும் காதல் எனக்கு ரொம் பிடிக்கும் என்ற திரில்லர் படமும் அதேநாளில் ரிலீசுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே தான் இன்று ஒரே நாளில் ஒன்பது படங்கள் ரிலீசாகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X