Just In
- 1 hr ago
சித்ராவுக்கு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க டாக்டர்க்கிட்டேயே கேட்ட ஹேமந்த்.. வெளியான பகீர் தகவல்!
- 1 hr ago
ரியோ முகத்தில் ரியல் ஹேப்பி.. வீட்டுக்குப் போன உடனே ரிதி பாப்பாவை எப்படி தூக்கி கொஞ்சுறாரு பாருங்க!
- 3 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 3 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
Don't Miss!
- News
ஸ்டாலின் எந்த தொகுதி சொல்றாரோ...அங்கு கண்ணைமூடிட்டு போட்டியிடுவேன்...சொல்றது யாருனு பாருங்க!
- Lifestyle
யாரெல்லாம் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது தெரியுமா? உஷாரா இருங்க...!
- Sports
திறமைக்கு சல்யூட்.. என்ன ஒரு உறுதி.. இந்திய அணிக்கு ஆஸி. கிரிக்கெட் வாரியம் எழுதிய ஓபன் லெட்டர்!
- Automobiles
விதிமீறிய அமைச்சரின் கார்... சூப்பர் பாடம் புகட்டிய மோட்டார் வாகனத் துறை... என்ன நடவடிக்கை தெரியுமா?
- Education
ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
உச்சத்தில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 49,600க்கு மேல் வர்த்தகம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே ரிங்கில்.. ஒட்டி உரசி விளையாடிய பாலா டீம்.. தனித் தனி வளையமாக பிரித்து ஜெயித்த ஆரி டீம்!
சென்னை: தீபாவளி விளம்பர டாஸ்க்குகள் முடிந்த நிலையில், அடுத்ததாக நியூ இயர், பொங்கல் என விளம்பர டாஸ்க்குகள் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியையே போர் நிகழ்ச்சியாக மாற்றி வருகிறது.
உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு செம ஜாக்பாட் தான். ஒவ்வொரு விளம்பர டாஸ்க் முடிந்ததும், ஏகப்பட்ட கிஃப்ட்டுகள் கிடைக்கின்றன.
நேற்றைய நிகழ்ச்சியில் நிப்பான் ஃபைபர் விளம்பர டாஸ்க்கில் ஆரி, அனிதா, கேபி மற்றும் சோம் அணியும் பாலா, ஷிவானி, ரம்யா மற்றும் ஆஜீத் அணியும் மோதின.

நடுவர்கள் யார்
நிப்பான் பெயின்ட்டின் ஃபைபரோ ஃபைபர் டாஸ்க்கிற்கு நடுவர்களாக ரியோ ராஜ் மற்றும் அர்ச்சனா நியமிக்கப்பட்டனர். பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் மற்றும் ஆஜீத் அணியினர் முதலில் ஹைட் அண்ட் சீக் கேமை விளையாட ஆரம்பித்தனர்.

ஒரே ரிங்கில்
ஒரு அணியினருக்கு ஒரு ரிங் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் குழுவாக தங்களை இணைத்துக் கொண்டு பாலாஜி முருகதாஸ், ஷிவானி, ரம்யா மற்றும் ஆஜீத் ஆகியோர் விளையாடினர். பாலாவை ஒட்டி உரசி ஷிவானியும் ரம்யாவும் என்னம்மா விளையாடுறாங்க, வாழுறான் பாலா என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் சமூக வலைதளத்தில் குவிந்தன.

உறியடித்த ஆஜீத்
ஒவ்வொரு இடத்திலும் மறைத்து வைக்கப்பட்ட வாசகங்களை தேடி கண்டுபிடித்து, நிப்பான் விளம்பரத்தை சற்றே ஜாலியான விளையாட்டாக கொண்டு சென்றனர். பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற போட்டி என்பதால், உறியடி நிகழ்ச்சியும் கடைசியாக நடந்தது. பாலா டீமில் ஆஜீத் தான் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்று உறியடித்தார்.

தனித்தனி வளையமாக
ஒரே வளையமாக பாலா டீம் விளையாடிய நிலையில், ஆரி, அனிதா, சோம் மற்றும் கேபி உள்ள அணியினர் ஒட்டி உரசி விளையாட வேண்டாம் என திட்டம் போட்டு, தனித்தனி வளையமாக அதனை மாற்றிக் கொண்டு தங்களின் தேடல் வேட்டையை துவங்கினர். அனிதா, சோம், ஆரி மற்றும் கேபி என அனைவரும் தங்களது பங்களிப்பு கொடுத்தனர்.

செம ஸ்பீடு
பாலா டீமில், பாலா மற்றும் ரம்யா மட்டுமே ஒவ்வொரு இடத்தையும் கண்டுபிடித்து வாசகங்களை சேகரித்தனர். மேலும், அவர்கள் அமைத்த வளையத்தால் நகர முடியாமல் ரொம்பவே சிரமப்பட்டனர். ஆனால், ஆரி அணியினர் ஓடி ஓடி எல்லா இடத்தையும் கண்டுபிடித்து செம ஸ்பீடில் தங்களது டாஸ்க்கை முடித்தனர்.

வெற்றி யாருக்கு
இறுதியாக ஆரி உறியடித்த நிலையில், சில அடிகள் மிஸ் ஆனதை கண்டு பாலா விழுந்து விழுந்து சிரித்தார். இறுதியாக ஆரி உறியடித்து தங்கள் அணியை குறைவான நேரத்தில் வெற்றி பெற செய்து, நிப்பான் நிறுவனம் வழங்கிய பரிசை தட்டிச் சென்றனர். இன்னும் எத்தனை விளம்பரத்தை பார்க்கணுமோ?