'நீரா ராடியா' கேரக்டரை படமாக்குவதற்கு மிரட்டல் வருகிறது - முக்தா சீனிவாசன் மகன் புகார்

By Shankar

Nira Radia
பத்தாயிரம் கோடி என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படத்தில் ஒரு பாத்திரத்துக்குப் பெயர் நீரா ராடியா.

2 ஜியில் அரசியல் உலகைக் கலக்கிய அதே கார்ப்பொரேட் தரகர் நீரா ராடியாவை அவர் பெயரிலேயே ஒரு பாத்திரமாக்கியுள்ளனர் இந்தப் படத்தில்.

இப்படத்தை முக்தா சீனிவாசனின் மகன் வி.சீனிவாசன் சுந்தர் இயக்குகிறார். பிரச்சினை என்னவென்றால், நீரா ராடியா என்ற பெயரையும் பாத்திரத்தையும் பயன்படுத்துவதற்கு மிரட்டல் வருகிறதாம் சுந்தருக்கு.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியல் புரோக்கராக இருந்து ஒரு பெண் சேர்த்து வைத்த பத்தாயிரம் கோடி பணத்தை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. தரகர் வேடத்தில் பல்ஜித் கவுர் என்பவர் நடிக்கிறார். இப்படம் நீரா ராடியா பற்றிய கதை என்ற தகவல் பரவி விட்டதால் எனக்கு மிரட்டல்கள் வந்தன.

நீரா ராடியா கதையை படமாக்க கூடாது என்று மிரட்டினார்கள். மிரட்டியவர்கள் யார் என்ற விவரங்களை எனது தந்தை முக்தா சீனிவாசனிடம் கூறியுள்ளேன்," என்றார். இப்படத்தில் நாயகனாக துருவ், நாயகியாக மாடல் ஷா மற்றும் விவேக், கோகுல் செல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X