நிரஞ்சனி கொண்டாடிய பேச்சுலர் பார்ட்டி.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை : நடிகை நிரஞ்சனி பல்வேறு திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதோடு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
நடிகை விஜயலட்சுமியின் சொந்த தங்கையான இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்க இன்னும் ஓரிரு வாரத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை திருமணம் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பேச்சுலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடி இருக்கும் நிரஞ்சனியின் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
வான்மதி, காதல் கோட்டை என்ற இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை அடுத்தடுத்து அஜித்திற்கு கொடுத்த இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒருவர் நடிகை விஜயலட்சுமி சென்னை-28 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பல்வேறு சீரியல்களிலும் நடித்து வருகிறார். அவரது மூன்றாவது மகள் நிரஞ்சனி அகத்தியன் பல வருடங்களாக சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வந்தார் . கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இரண்டாம் கதாநாயகியாக
அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் இதில் இரண்டாம் கதாநாயகியாக அறிமுகமான நிரஞ்சனிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பணியாற்றும்போது நடிகை நிரஞ்சனிக்கும் தேசிங் பெரியசாமிக்கு இடையே நட்பு ஏற்பட்டு அது பின் காதலாக மாறியுள்ளது.

பாண்டிச்சேரியில் ரிசார்ட்
இந்த காதல் விவகாரம் தெரிய வந்ததும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த வார இறுதியில் இவர்களது திருமணம் பாண்டிச்சேரி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற இருக்கின்றது.

கருப்புநிற டிரஸ்
இந்தநிலையில் சகோதரிகள் நிரஞ்சனி விஜயலட்சுமி கார்த்திகா மற்றும் அவர்களது நண்பர்கள் என பலரும் இணைந்து நிரஞ்சனியின் பேச்சுலர் பார்ட்டியில் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடியதோடு அந்த பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்க வைரலாகி வருகிறது. இதில் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் கருப்புநிற டிரஸ் அணிந்து கொண்டு கலக்கலாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்


Click it and Unblock the Notifications











