twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு வெப் சீரீஸ் ஆகிறது

    By Siva
    |

    மும்பை: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கு பற்றி நெட்பிளிக்ஸில் தொடர் வெளியாக உள்ளது.

    2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். அந்த சம்பவம் நடந்து 6 ஆண்டுகள் ஆகியபோதிலும் அதை பலராலும் மறக்கவே முடியவில்லை.

    Nirbhaya rape case inspired web series in Netflix

    இந்நிலையில் அந்த கொடூர சம்பவத்தின் போலீஸ் விசாரணை அடிப்படையில் வெப் சீரீஸ் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லி கிரைம் என்ற தலைப்பில் அந்த சீரீஸ் நெட்பிளிக்ஸில் வரும் மார்ச் மாதம் 22ம் தேதி முதல் வெளியாக உள்ளது.

    இந்த தொடர் 7 எபிசோடுகளில் வெளியாகவிருக்கிறது. தொடரை எழுதி, இயக்கியுள்ளார் ரிச்சீ மேத்தா. டெல்லி கிரைம் தொடர் பெண் போலீஸ் அதிகாரியான வர்திகா சதுர்வேதியை சுற்றியே நகருமாம். ஷெஃபாலி ஷா வர்திகாவாக நடித்துள்ளார்.

    இந்த தொடரில் ஆதில் ஹுசைன், ரசிகா துகல், ராஜேஷ் தைலங், கோபால் தத், வினோத் ஷெராவத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரை எடுக்க இயக்குனர் உள்ளிட்டோர் 6 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர்.

    மேலும் சம்பவம், விசாரணை நடந்த இடங்களில் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

    Read more about: netflix
    English summary
    Nirbhaya rape case inspired web series titled Delhi crime will be shown on Netflix from march 22nd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X