»   »  நடிகை நிர்மலா சரண்

நடிகை நிர்மலா சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மனோகரனி மருமகள் தற்கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த டிவி நடிகை நிர்மலா இன்று நீதிமன்றத்தில சரணடைந்தார்.

மனோகரனின் மகன் நவீன்குமாரின் மனைவி மதுதேவி கடந்த 2ம் தேதி தூக்குப் போட்டு தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலைக்கு முன் எழுதி வைத்த கடிதத்தில், கணவர் நவீன் குமாருக்கு டிவி நடிகைநிர்மலாவுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் தன்னுடன் கணவர் சரிவர குடும்பம் நடத்தவில்லை என்றும்குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது நகைகள், பணத்தை நிர்மலாவுக்கு தந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். மாமனார் மனோகரன்,மாமியார் கனகவல்லி, நாத்தனார் உமா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுதேவிகடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அடையார் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி மதுதேவியின் கணவர்நவீன்குமாரை கைது செய்தனர்.

அவர் நிர்மலாவுடனான கள்ளத் தொடர்பை ஒப்புக்கொண்டார்.

நிர்மலா, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அங்குபோலீசார் அவரை விசாரிக்க சென்றபோது தலைமறைவாகி விட்டார்.

அவரது வீட்டில் இருந்து மதுதேவியின் நகைகளையும், நவீன்குமார் கொடுத்து பணத்தையும் போலீசார்கைப்பற்றினர். இந் நிலையில் மனோகரன், கனகவல்லி, உமா, நடிகை நிர்மலா ஆகியோர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந் நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு வந்தார் நிர்மலா. பர்தாஅணிந்தபடி காரிலிருந்து இறங்கிய அவர் நீதிமன்றத்துக்குள் சென்றார். நீதிபதி அருணாசலம் முன் சரணடைந்தஅவரது சார்பில் வழக்கறிஞர் முத்தழகன் சரண் அடையும் மனுவை கொடுத்தார்.

பர்தாவில் கோர்ட்டுக்கு வந்த நிர்மலா

அதை பெற்றுக் கொண்டு நீதிபதி, சரண் அடையும் மனுக்களை 10.30 மணிக்குள் கொடுக்க வேண்டும். நீங்கள்தாமதமாக வந்திருக்கிறீர்களே என்றார். என்றாலும் சரண் அடையும் மனுவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தநீதிபதி விராணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.

பிற்பகல் 3 மணிக்கு மேல் மனு மீதான விசாரணை நடைபெறும். அதுவரை நடிகை நிர்மலா நீதிமன்றத்தில் இருந்துஜாமீன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நீதிபதி.

இதற்கிடையே நவீன்குமார் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனக்கு நிர்மலா நல்ல செக்ஸ்ஒத்துழைப்பும், மகிழ்ச்சியையும் தந்ததாகவும் அதனால் தான் அவரிடமே தன்னை ஒப்படைத்ததாகவும் பணம்,நகைகள் தந்தாகவும் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil