ஆக்ரோஷமான நிரூப்.. அதை நீங்க பிளே பண்ணுங்க.. நான் வெளியே போறேன்.. கும்பிடு போட்ட பிரியங்கா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரெட் டிவி அணியினர் டிஆர்பியை எகிற வைக்க ஸ்க்ரீப்ட் பேப்பரை கிழித்தெறிந்து வாக் அவுட் செய்தனர்.
மேலும் தாமரை செல்வியையும் கிண்டலடித்து கண்ணீர் விட வைத்தனர். கடைசியில் நடந்தது எல்லாமே பிராங்க் என கூறி வெறுப்பேற்றினர்.

ஆக்ரோஷமான நிரூப்
இந்நிலையில் இன்றைய எபிசோடின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதிலும் கூச்சல் குழப்பம் சண்டை சச்சரவாய் உள்ளது. அதாவது, புரமோவில் பேசும் நிரூப், டாஸ்க் ஃபுல்லாவே சும்மா இஷ்டத்துக்கு கலாய்த்தீர்கள், நான் வேண்டாம் என்று கூறியும் விடாமல் இப்படிதான் கலாய்ப்பேன் என்று கூறி கலாய்த்தீர்கள், எதற்கு கலாய்த்தீர்கள் என்று பிரியங்காவிடம் ஆக்ரோஷமாக கத்துகிறார்.

வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானே
அப்போது குறுக்கிடும் அபிஷேக், உன்னை நான் கலாய்த்ததில் உனக்கேதும் பிரச்சனை என்றால் என்னிடம் கேள். எதற்கு பிரியங்காவிடம் கத்துகிறாய் என்கிறார். அதனை தொடர்ந்து பேசும் பிரியங்கா, அப்பவே வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானே என்று தன் பங்குக்கு கத்துகிறார்.

இன்றும் சண்டையுடன் தான் போகுமா
தொடர்ந்து பேசும் பிரியங்கா, பிளீஸ் பிக்பாஸ், இதை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் சிபியின் பெட்டில் அமர்ந்து பேசியதை ஒளிபரப்புங்கள். எனக்காக நீங்கள் இதை போட்டாக வேண்டும். அப்புறம் என்னை வெளியே அனுப்புங்க, நான் வெளியே போகிறேன் என்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றும் சண்டையுடன் தான் போகுமா என்று கூறி வருகின்றனர்.

மரியாதையை இழக்கிறார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரியங்கா கடந்த சில நாட்களாக தனது சுயரூபத்தை காட்டி வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் உள்ள அண்ணாச்சி மற்றும் தாமரையின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வருகிறேன் முக மூடியை கிழிக்கிறேன் எனக்கூறி தனது மீதான மரியாதையை இழந்து வருகிறார் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











