twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபிஷேக்கை தலைகீழாக தொங்க விட்ட நிரூப்...எதுக்குன்னு நீங்களே பாருங்க

    |

    சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் எட்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதற்காக பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாறியது. ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர்.

    கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான் கமலுக்கு பதில் தொகுத்து வழங்க போவது யார்... பிக்பாஸின் 3 திட்டங்கள் இதுதான்

    வார்டனாக சிபி, ஆசிரியர்களாக ராஜு, அபிஷேக், அமீர் ஆகியோர் செயல்பட்டனர். மாணவர்களாக பிரியங்கா, நிரூப், பாவ்னி, தாமரை, ஐக்கி, இமான் அண்ணாச்சி, வருண், அபினய் ஆகியோர் யூனிஃபார்ம் அணிந்து விளையாடினர்.

     சிபி – பிரியங்கா சண்டை

    சிபி – பிரியங்கா சண்டை

    கண்டிப்பான வார்டனாக இருந்த மாணவர்களை மிகவும் அடக்கி வைக்கிறார். அதிகம் சேட்டை செய்யும் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார். தண்டனைகளை ஏற்க முடியாது என கூறி முதல் நாளில் சிபியுடன் சண்டை போடுகிறார் பிரியங்கா. அதற்கு தண்டனையாக வீட்டிற்கு வெளியே சென்று தூங்க வைக்கப்படுகிறார்.

    சிபி – அக்ஷரா சண்டை

    சிபி – அக்ஷரா சண்டை

    டாஸ்கின் இரண்டாவது நாளில் சிபியிடம் ஆக்ரோஷமாக கத்தி, பொருட்களை உடைத்து, தன்னை தானே தாக்கி மோசமாக நடந்து கொள்கிறார் அக்ஷரா. பிறகு பிக்பாஸ் கூப்பிட்டு கண்டித்ததும் கதறி கதறி அழுகிறார். பிறகு தானே சமாதானம் ஆகி டாஸ்க்கில் தொடர்ந்து பங்கேற்கிறார்.

    ஆசிரியர்களை உதைக்கும் மாணவர்கள்

    ஆசிரியர்களை உதைக்கும் மாணவர்கள்

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 53 வது நாளான இன்றுடன் போர்டிங் ஸ்கூல் முடிவதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனையடுத்து டாஸ்க் முடிந்ததும் ஆசிரியர்களாக செயல்பட்ட சிபி, ராஜு, அமீர் ஆகியோரை சேரில் கை, கால்களை கட்டி வைத்து, பவுடர், தண்ணீர் ஆகியவற்றை கொட்டி, அடித்து உடைக்கிறார்கள் மாணவர்களாக இருந்த போட்டியாளர்கள் அனைவரும்.

     வார்டனுக்கு இந்த நிலைமையா

    வார்டனுக்கு இந்த நிலைமையா

    ராஜுவை சேரோடு கட்டி வைத்து விட்டு, அவருக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். சிபியை பெண் போட்டியாளர்களை கையை பின்னால் கட்டி அடித்து உதைத்து, இழுத்து வருகிறார்கள். தாமரை உண்மையாகவே அவரை அடிக்கிறார். ஒரு வார்டனுக்கு இந்த நிலையா என பரிதாபமாக கேட்கிறார் சிபி.

    தலைகீழாக தொங்க விடப்பட்ட அபிஷேக்

    தலைகீழாக தொங்க விடப்பட்ட அபிஷேக்

    இவர்கள் மூன்று பேருக்கும் நடப்பதை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக். அவரை தலைகீழாக தூக்கி வருகிறார் நிரூப். தலைகீழாகவே கொண்டு வந்து அவரையும் சேரில் அமர வைத்து, தண்டனை கொடுக்கிறார்கள் மாணவர்களாக இருந்து கஷ்டங்களை அனுபவித்த மற்ற போட்டியாளர்கள்.

    English summary
    After completing boarding school task, housemates who were played as students attacked raju, cibi, abishek and ameer who acted as teachers. they are tied with chairs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X