என்னை விட பாவனிக்கு அதிகம் தெரியும்.. கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கிறாரே செல்ஃபிஷ் நிரூப்!

சென்னை: நிரூப் செய்வது செல்ஃபிஷ் மாதிரி தெரியுதா என நிரூப்பின் நீண்ட மொக்கைக்கு பிறகு ஒரே ஒரு வார்த்தையில் முடித்து விட்டார் கமல்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 8th January 2022 - Promo 2 | Contestant பற்றி Ciby-யின் கருத்து!!

சம்யுக்தா இந்நேரம் இருந்திருந்தா ஷ்ஷப்பா.. முடியலடா என ரியாக்ட் செய்திருப்பார்.

நிரூப்புக்கு ஆதரவாக பாவனி பேசி வந்தாலும் அவருக்கே தொடர்ந்து ஆப்பு அடித்து வருகிறார் நிரூப் என பாவனி ஆர்மியினர் பாயின்ட்டை பிடித்து விட்டனர்.

அவனுக்கு சப்போர்ட் பண்ணாத

அவனுக்கு சப்போர்ட் பண்ணாத

நிரூப் தன்னை அனைவரும் எதிர்த்து விளையாடுகின்றனர் என ஒரு மாய திரையை பாவனியின் நைஸாக பேசி கிரியேட் பண்ணி அவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் நிரூப்புக்கு எதிராக கமெண்ட்டுகளை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். பிரியங்காவும் பாவனி நிரூப்புக்காக பேச வரும் போதெல்லாம் சந்திரமுகியாகி எரிந்து விழுந்து பாவனியை சேவ் பண்ண துடிக்கிறார்.

பாவனிக்கு அதிகம் தெரியும்

பாவனிக்கு அதிகம் தெரியும்

பிக் பாஸ் நிகழ்ச்சியை கரைத்துக் குடித்து விட்டு உள்ளே வந்திருக்கான் சார் என பிரியங்கா பேச நான் 3 சீசன் தான் சார் பார்த்துட்டு வந்தேன். பாவனிக்குத் தான் என்னை விட நிறைய தெரியும் என சரியான நேரத்தில் கோர்த்து விட்டு ஸ்கோர் செய்து விட்டார். இவனை நம்பி ஒரே ஒரு டயலாக் சொன்னதுக்கு நம்மளை இப்படி பண்றானே என்று கூட பாவனி நினைத்து இருக்க மாட்டார் என பாவனி ரசிகர்கள் அவருக்காக புலம்பி வருகின்றனர்.

ஃபைனல்ஸ் போகக்கூடாதுன்னு

ஃபைனல்ஸ் போகக்கூடாதுன்னு

பாவனியை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் இரண்டாவது ஃபைனல்ஸ் ஆக மாற்ற வேண்டும் என மனதார விரும்பி தண்ணீர் ஊற்றினர். ஆனால், நிரூப் பாவனியின் நண்பன் என்று சொல்லிக் கொண்டே பாவனி ஃபைனல்ஸ் போவதை விரும்பவில்லை. மாறாக தான் ஃபைனல்ஸ்க்கு செல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் பாவனிக்கு எதிரான வேலையை செய்தார். எல்லாம் தெரிந்திருந்தால் பாவனி நிச்சயம் நிரூப்பின் தலையில் தண்ணீர் ஊற்றி இருக்க மாட்டார்.

செல்ஃபிஷ் நிரூப்

செல்ஃபிஷ் நிரூப்

இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப் எப்படி வந்தார் என்பதை ஹவுஸ்மேட்களிடம் கமல் கேட்க ஆரம்பிக்க பிரியங்காவும் அமீரும் எழுந்து வண்டை வண்டையாக திட்டி குமித்து விட்டனர். கடைசியாக செல்ஃபிஷ் நிரூப் என்றே அவருக்கு புதிய பெயரையும் கமல் பிரியங்கா மூலமாக வைத்து விட்டார்.

இன்னொரு சிபி அமீர்

இன்னொரு சிபி அமீர்

இந்த சீசனில் சிபியை போன்ற இன்னொரு நபராக அமீர் மாறி வருகிறார். நிரூப் செய்யும் அனைத்து காரியங்களையும் புரிந்து கொண்டு அதற்கு எதிர்வினையாற்ற துடித்துக் கொண்டு இருக்கிறார். நிரூப்பை வெளியே அனுப்ப யாருமே சம்மதிக்காத நிலையில், அதற்கும் தயாரான சொன்ன ஒரே நபர் அமீர் தான். வரும் வாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் வெடிக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X