வாணி மட்டும் தான் இருக்கு இசை எங்கே? அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்தியது யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் பஞ்ச தந்திர காயின் டாஸ்க் கொடுக்கப்பட்டு அந்த காயின்களின் பவரை வாரம் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அதிகாரத்தை கொடுத்துள்ளனர்.

போன வாரம் நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணி கிச்சன் ஏரியா ஆளுமையுடன் அந்த பவரை பயன்படுத்தினார்.

இந்த வாரம் நிரூப் நிலம் காயினை கொண்டு பெட்ரூம் ஏரியாவின் ஆளுமையை பெற்றிருந்த நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் வச்சு செய்தார்.

சர்வாதிகாரி யார்

சர்வாதிகாரி யார்

கட்ந்த இரு வாரங்களாக பஞ்ச தந்திர காயின்களை வைத்திருப்பவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இசைவாணி மற்றும் நிரூப் இதுவரை ஆட்சி செய்த நிலையில், யார் சர்வ அதிகாரத்தையும் சிறப்பாக செய்தார் என கமல் ஒரு சின்ன கப் டாஸ்க்கை வைத்து ஹவுஸ்மேட்களை ஓட்டுப் போட வைத்தார்.

பிக் பாஸ் பண்ண வேலை

பிக் பாஸ் பண்ண வேலை

நெருப்பு ஆற்றலை கொண்டு கிச்சன் ஏரியாவை இசைவாணி ஆளுமை செய்த போது பிக் பாஸ் தனியாக கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து அவருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பது பற்றி தெரிவித்தார். வெளியே வந்து இசை என்ன தான் சொன்னாலும் யாருமே அவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில் நிரூப்புக்கு மட்டும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுக்கும் புரியும் படி ஏகப்பட்ட பவர்களை கொடுத்து அக்‌ஷரா எனும் அசிஸ்டென்ட்டை கொடுத்து பிரேக் ஃபாஸ்ட் எல்லாம் பெட்டுக்கே வரும் படி செய்திருந்தார்.

இசைக்கு ஆதரவாக

இசைக்கு ஆதரவாக

யாருடைய ஆளுமை சிறப்பாக இருந்தது என அடுத்த வாரம் இன்னும் மற்றவர்கள் சர்வாதிகாரத்தை அதிகமாக செய்யும் அளவுக்கு தூண்டி விட கப் டாஸ்க்கை கொடுத்திருந்தார் கமல் சார். இசைவாணிக்கு ஆதரவாக பிரியங்கா, ராஜு ஜெயமோகன், மதுமிதா, சிபி, சுருதி மற்றும் பாவனி கப் வைத்தனர்.

உயரத்தில் நிரூப்

உயரத்தில் நிரூப்

ஆள் எந்த அளவுக்கு உயரமோ அதே போல அவருக்கு ஹவுஸ்மேட்கள் கொடுத்த கப்புகளின் அளவும் சுருதியின் கோப்பைகளை விட சற்றே உயரமாக இருக்க இந்த போட்டியில் நிரூப் வெற்றி பெற்றார். அபிநய், ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, தாமரை, அக்‌ஷரா, வருண் உள்ளிட்ட போட்டியாளர்கள் நிரூப்பின் ஆளுமை தான் சிறப்பாக இருந்தது எனக் கூறினர்.

இசை எங்கே

இசை எங்கே

வாணி மட்டும் தான் வெளியே தெரிகிறது இசை எங்கே? என தனது பாடும் அடையாளத்தையே சில பயத்தின் காரணமாக இசைவாணி தொலைத்து விட்டது ஏன் என கமல் கேள்விகளை எழுப்பி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக வேண்டாமா? இறங்கி ஆடுங்க என்பது போல ஊக்கம் அளித்துள்ளார். பல வாரங்களாக கமல் சாரும் சொல்றாரு, மக்களும் முதல் நபராக சனிக்கிழமையே சேவ் பண்றாங்க இசைவாணி இனியாவது தனது ஆட்டத்தை காட்டுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X