பிக் பாஸ் வீட்டில் ஒரே சண்டை.... யாருக்கும் அடங்காத நிரூப்… கடுப்பாகும் ஹவுஸ்மெட்ஸ்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அக்ஷ்ரா, அபினய், இமான், ராஜு, பாவ்னி, மதுமிதா, சிபி ஆகியோர் உள்ளனர்.
இவர்களில் ராஜுவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருப்பதால் அவர் முதல் நபராக சேவ் செய்யப்பட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாவனியின் ராஜ்ஜியம்
இந்த வாரத்தில் ஆகாயத்தின் நாணயத்தின் காயினை வைத்திருக்கும் பாவனிக்கு பிக் பாஸ் வீட்டில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பவானியில் அனுமதியுடன் தான் லிவ்விங் ஏரியாவில் நடக்கவோ பயன்படுத்தவோ முடியும். பவானியிடம் அனுமதி பெறாமல் வருபவர்களுக்கு அவர் தண்டனை கொடுக்கலாம், பாவனி கூறுவதை மற்ற போட்டியாளர்கள் செய்கிறார்களா என்பதை கண்காணிக்க தாமரையை உதவியாளராக நியமித்துள்ளார்.

விதியை மீறிய நிரூப்
இதையடுத்து, 40வது நாளான இன்று லிவ்விங் ஏரியாவிற்குள் பவானியின் அனுமதி பெறாமல் வந்ததற்காக நிரூப்பிற்கு 40 முறை தோப்புக்கரணம் போடும் தண்டனை வழங்கப்பட்டது. தோப்புக்கரணம் போட்டுவிட்டு மீண்டும் விதியை மீறினார் நிரூப்.

அடங்காத நிரூப்
இதனால் மற்ற போட்டியாளர்கள், நிரூப்பிற்கு ஒரு ரூல் எங்களுக்கு ஒரு ரூலா என்று பாவனியிடம் கேள்வி கேட்டனர். இதனால் மீண்டும் நிரூப்பிற்கு நூறு முறை லிவ்விங் ஏரியாவை சுற்றி வரும்படி தண்டனை அளித்தார். அந்த தண்டனையை ஏற்க மறுத்த நிரூப், 40 முறை தோப்புக்கரணம் போட்டு விட்டேன் மீண்டும் இந்த தண்டனையை ஏற்க முடியாது என்று வாக்குவாதம் செய்தார். மற்ற போட்டியாளர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நிரூப் கேட்காமல் அவர் இஸ்டத்திற்கு இருந்தார்.

அனைவருக்கும் தண்டனை
இதனால் கோபமடைந்த பாவனி பெடஸ்டரிலிருந்து நாணயத்தை எடுத்துவிட்டு யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை இதனால் அனைவருக்கும் இன்று தண்டனை என்று கூறி இன்னைக்கு புல் டே காயினை வைக்க மாட்டேன் என்று கூறினார். மதுமிதா, அக்ஷரா அனைவரும் பவானி கொடுத்த தண்டனை ஏற்றுக்கொண்ட நிலையில், நிரூப் மட்டும் இப்படி ரூலை மதிக்காமல் இருப்பதால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பானார்கள்.

பவானி வேறலெவல்
பவானி கடந்த வாரம் நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று கூறி இருந்தார். ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் நிரூப் ஒவரா பேசுவதால் குரலை உயர்த்தி கத்தி, இது என் இடம் நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று நிரூப்கை ஒரு அதட்டு அதட்டினார். இதையடுத்து, நிரூப் நான் ரூல் பிரேக் பண்ணமாட்டேன் என்று கத்திக்கொண்டே லிவிங் ஏரியாவை ஒரு சுற்று சுற்றி வந்தார்.


Click it and Unblock the Notifications











