ஹேர்கட்லாம் பண்ணது வீணாப்போச்சே.. முதல் நபராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஃபைனலிஸ்ட் நிரூப்?
சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் முதல் நபராக நிரூப் நந்தகுமார் வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Recommended Video
கடந்த வாரமே வெளியேறி இருக்க வேண்டிய நிரூப் சகுனி மாமா கேம் ஆடி தாமரை வெளியேற காரணமாக மாறிவிட்டார் என தாமரை ரசிகர்கள் திட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், நிரூப் வெளியேறியுள்ள தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹேர்கட் வீணாப்போச்சே
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தலைமுடியை கடந்த 3 ஆண்டுகளாக வெட்டாமல் வளர்த்து வருகிறேன் என சொல்லி வந்த நிரூப் பிக் பாஸ் கேட்டுக் கொண்டதும் முடியை வெட்டிக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். ஹேர் கட் பண்ணிக் கொண்டு காட்டானில் இருந்து ஹேண்ட்ஸம் ஆளாக நிரூப் மாறியதும் டைட்டிலே அவருக்குத் தான் கிடைக்கப் போகுதா? என ரசிகர்கள் மத்தியில் சந்தேகங்கள் கிளம்பின.

தாமரைக்கு பதிலாக
பிக் பாஸ் வீட்டில் இருந்து பல வாரங்களுக்கு முன்பாகவே நிரூப் வெளியேறி இருக்க வேண்டும். கடந்த வாரம் கூட நிரூப் தான் வெளியேறி இருக்க வேண்டியது. ஆனால், பிக் பாஸ் கொடுத்த ஒரு ஆப்ஷனை பயன்படுத்திக் கொண்டு நிரூப் செகண்ட் ஃபைனலிஸ்ட் ஆனதும் நிரூப்புக்கு பதிலாக தாமரை வெளியேறியதும் திட்டமிட்ட சதி என விமர்சனங்கள் எழுந்தன.

நிரூப் எவிக்டட்
கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமைக்கான எபிசோடு முடிந்து ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் நபராக பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இருந்து நிரூப் எவிக்ட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முந்திய அமீர்
அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்பில் குறைவான ஓட்டுக்களுடன் அமீர் கடைசி இடத்தில் இருந்த நிலையில், தற்போது நிரூப் வெளியேறி உள்ள நிலையில், அமீர் நிரூப்பை முந்தியிருப்பது நல்ல விஷயம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏமாற்றினால் முதல் நபராக ஏமாறத்தான் வேண்டும் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விரைவில் தெரிந்து விடும்
5வது இடத்தில் நிரூப் வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ள நிலையில், இன்றே ஞாயிற்றுக்கிழமைக்கான ஷூட்டிங் முடிவு பெற உள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர், யார் ரன்னர் அப் என்பது இன்றே தெரிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எதிர்பார்த்த வெற்றியாளர் தான் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











