என்னது ராஜுவுக்கு ரெட் கார்டா? ரசிகர்களின் அந்த ஆசையை இப்படி நிறைவேற்றி வைத்த கமல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாருக்காவது அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டும் என கடந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் தொடங்கி இந்த சீசன் வரை ரெட் கார்டை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ரெட் கார்டு கொடுக்கும் படலம் நடந்தேறியது.
Recommended Video
இவருக்கு தகுதி இல்லை என்றும் இவருக்கு பதில் வெளியேறிய ஒரு நபர் இருந்திருக்கலாம் என்றும் போட்டியாளர்களையே சொல்ல வைத்து ரெட் கார்டு கேம் ஆடி விட்டார் கமல்.
ராஜுவுக்கு நிரூப் ரெட் கார்டு கொடுத்ததை பார்த்து ராஜுவே டென்ஷன் ஆகி விட்டார்.

ரெட் கார்டு கேம்
ஞாயிற்றுக் கிழமை யார் எவிக்ட் ஆகி வெளியே போவார் என்பது முன்னதாகவே லீக் ஆகி விடுகிற நிலையில் ஷோவில் சின்ன சின்ன சுவாரஸ்யங்களை கொடுக்க தொடர்ந்து பிக் பாஸ் டீம் முயற்சித்து வருகிறது. ரெட் கார்டு கொடுத்து அமீரை வெளியே அனுப்பிடுங்க, தாமரைக்கு ரெட் கார்டு கொடுங்க, பிரியங்காவுக்கு ரெட் கார்டு கொடுங்க என ரசிகர்கள் கொந்தளித்து வந்த நிலையில், லோகி வெப்சீரிஸில் இன்ஃபினிட்டி ஸ்டோனுக்கு ஏற்படும் நிலைமையை போல ரெட் கார்டை போட்டியாளர்களே கொடுக்கும் கேமை வைத்து அதற்கு மதிப்பில்லாமல் செய்து விட்டார் கமல்.

பீடிகை வேண்டாம்
ஓப்பன் நாமினேஷன் மற்றும் கன்ஃபெஷன் ரூமில் எப்படி தைரியமாக ஓப்பனாக அடுத்தவரை பற்றி சொல்றீங்களோ அதே போல இந்த இடத்தில் இவர் இருக்க தகுதியற்றவர். இவருக்கு பதிலாக எலிமினேட் ஆன ஒருவர் இருந்திருக்கலாம் என பளிச்சென சொல்ல வேண்டும். எந்த பீடிகையும் கூடாது என பிரியங்கா உள்ளிட்டோரை மனதில் வைத்தே கமல் கண்டிஷன் போட்டு விட்டார்.

ராஜுவுக்கு ரெட் கார்டு
ரெட் கார்டை எடுத்துக் கொண்டு இதை நான் சிபிக்கு கொடுக்கப் போகிறேன் என கிளம்பிய நிரூப், அந்த கண நேரத்தில் ஒரு கால்குலேஷனை போட்டு இல்லை சார் இதை நான் ராஜுவுக்கு கொடுக்கிறேன் என மாற்றிக் கொடுத்தார். நிரூப் ஒரே மனக் குழப்பத்தில் உள்ளார் என ராஜு உள்பட அனைத்து பிக் பாஸ் ரசிகர்களும் புரிந்து கொண்டனர்.

ராஜுவுக்கு பதில் அபிஷேக்
ராஜு காமெடி நிகழ்ச்சியாக பிக் பாஸை மாற்றி விட்டார் சார். பிசிக்கல் டாஸ்க் விளையாட மாட்டேங்கிறார். ராஜு இந்த கேமில் இருக்க தகுதியற்றவர். அவருக்கு பதிலாக அபிஷேக் ராஜா இருந்திருந்தால் கேம் வேற லெவலுக்கு சென்று இருக்கும். அவர் தான் எனக்கு டஃப் ஆன போட்டியாளர் என நிரூப் புதிய உருட்டை உருட்ட கந்தர்வ கோட்டை சமஸ்தானமே ஆடிப் போய் விட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

நிரூப்பிடம் உண்மையில்லை
கேமாக விளையாட வேண்டும் என இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே ஒரே ஸ்ட்ராட்டஜியுடனே விளையாடி வருகிறார் நிரூப் என்றும் ஒரு இடத்தில் கூட நிரூப் நிரூப்பாக இல்லை அவரிடம் ஒருவிதமான போலித்தனம் தான் மேலோங்கி இருந்தது என ஒரே போடாக போட்டு ஒரு வாரமாக நிரூப் ஒட்ட வைத்ததை எல்லாம் உடைத்து தள்ளி விட்டார் ராஜு.

பிரியங்கா முட்டையை உடைத்திருந்தால்
பாவனியின் முட்டைக்கு பதில் பிரியங்காவின் முட்டையை நான் உடைச்சிருந்தா நீ சந்தோஷப்பட்டு இருப்ப நிரூப் என நிரூப்பின் உண்மையான முகமூடியை கிழித்துத் தொங்க விட்டார் ராஜு பாய் என ரசிகர்கள் மீம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாச்சி இருந்திருக்கணும்
நிரூப் சொன்னதை போலவே அபிஷெக் இருந்திருக்கணும் என பிரியங்காவும் ஜீலி பண்ண விருப்பப்பட்டு சொல்ல ராஜு, சிபி, அமீர், தாமரை உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் இமான் அண்ணாச்சி இருந்திருக்கணும் என அதிகப்படியாக சொல்லி இமான் அண்ணாச்சியின் உச்சியை குளிர வைத்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











