திருடும் போது வசமா மாட்டிக்கொண்ட நிரூப்… பாதாள சிறையில் அடைத்த பிக் பாஸ் !
சென்னை : விஜய் டிவி-யில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டு வாரங்களை கடந்துள்ளது.
இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார், மேலும் முதல் எலிமினேஷனாக நாடியா வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் தற்போது 16 போட்டியாளர்கள் உள்ளனர்.

பஞ்ச தந்திரம்
பிக் பாஸ் எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஒரு புதிய டாஸ்க் ஒன்றை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கிற்கு பஞ்ச தந்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீடு அருங்காட்சியகமாக மாறுகிறது. இதில் விலை மதிக்க முடியாத 5 நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதை திருடுவதும், எடுத்ததை பாதுகாப்பதும் உங்கள் வேலை போட்டியாளர்கள் செய்து வருகின்றனர்

தீவிரமாகும் விளையாட்டு
ஒரு நாணயத்தை எடுத்தவுடன் அதனை பிக் பாஸிடம் காண்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வந்ததும் போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை தீவிரமாக விளையாடத் தொடங்கினார்கள்.

ஐக்கி பெர்ரி
இசைவாணி இமான் அண்ணாச்சியிடம் அண்ணா இந்த ஒருவாரம் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க என்கிறார். இதையடுத்து, குரூப் குரூப்பாக செயல்பட்டு நாணயத்தை திருடி வருகின்றனர். முதலில் ஐக்கி ஒரு நாணயத்தை எடுத்து பாத்ரூமில் மறைத்து வைக்கிறார். அந்த நாணயத்தை அக்ஷரா எடுத்துக்கொள்கிறார்.

தாமரைக்காக
அபிஷேக் நாணயத்தை எடுக்கிறார், அப்போது தாமரையிடம் உனக்காகத்தான் எல்லாரும் விளையாடுறோம் அமைதியா இரு என்கிறார். இதை கேட்ட தாமரை சொன்னதே போதும் என்று அழுகிறார். பிரியங்கா எடுத்த நாணயத்தை தாமரைக்கு தரபோகிறேன் என்கிறார், அபிஷேக்கும் தாமரைக்கு தரப்போகிறேன் என்கிறார். அப்போது, அண்ணாச்சி எல்லாரும் ஏன் தாமரையை காப்பத்த துண்டிக்கிறீங்க என கேட்கிறார்.

சலசலப்பு
கார்டன் ஏரியாவில் ஒலித்து வைத்திருந்த இரண்டு நாணயத்தை நிரூப் எடுக்கும் போது, அபினய் பார்த்துவிடுகிறார் இதனால் வீட்டில் சண்டை வருகிறார். எடுக்கும் போது பார்த்தால் மீண்டும் பாக்ஸில் வைக்க வேண்டும் என்று மற்றவர்கள் சண்டை இடுகிறார்கள். ஆனால் நிரூப் ஒத்துக்கொள்ளாமல் பிக் பாஸ்கிடம் இரண்டு நாணயம் இருப்பதாக கூறுகிறார்

பாதாள சிறையில்
நிரூப் நாணயங்களை எடுக்கும் போது அபினய்யிடம் பிடிபட்ட காரணத்தினால், பிக் பாஸால் பாதாள சிறைக்கு அனுப்படுகிறார். அவரிடம் இருக்கும் நாணயத்தை வாங்கி பேட்டியில் வைக்குமாறும், பிக் பாஸின் அடுத்த அறிவிப்பு வரும் வரை பாதாள சிறையில் நிரூப் இருக்க வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். இதையடுத்து நிரூப பாதாள சிறைக்கு செல்கிறார்.


Click it and Unblock the Notifications











