Don't Miss!
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரியங்காவுக்காக ஓட்டை மாற்றி குத்திய கருப்பு ஆடு இவர் தான்.. பொய் சத்தியம் பண்ணாம இருந்திருக்கலாம்!
சென்னை: பிக் பாஸ் வீடு கடந்த வாரம் அரசியல் மாநாடாக களைகட்டியது. அதில் தனித்தனியாக விளையாடி வந்த இரு அணிகள் கடைசி நேரத்தில் பிரியங்கா அணியை எதிர்த்து விளையாடின.
ஒரு அணியில் 8 பேரும் மற்றொரு அணியில் 4 பேரும் இருந்த நிலையில், பிரியங்கா அணிக்கு 5 ஓட்டுகள் எப்படி வந்தது என்கிற கேள்வி எழுந்தது.
விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சி... இந்த வாரம் ரஜினி ஸ்பெஷல்!
அதற்கான விடையை கமல் முன்பாக நிரூப் ஒப்புக் கொண்டு தான் தான் அந்த கருப்பு ஆடு என்பதை காட்டி விட்டார்.

5வது ஓட்டு
பிரியங்கா, பாவனி, அமீர் மற்றும் அபிநய் என 4 பேர் மட்டுமே இருந்த நிலையில், பிரியங்கா அணி தேர்தலை சந்தித்தது. சிபி, ராஜு, சஞ்சீவ், தாமரை, இமான், நிரூப், அக்ஷரா மற்றும் வருண் என 8 பேர் கொண்ட அணியில் அந்த அணிக்கு 7 ஓட்டுகள் மட்டுமே விழுந்தன. பிரியங்கா அணிக்கு 5 ஓட்டுகள் கிடைத்தன.

கருப்பு ஆடு
அந்த 5வது ஓட்டு யாரு போட்டது என்கிற கேள்வியும் அந்த கருப்பு ஆடு யாரு என்கிற சந்தேகமும் 8 பேர் கொண்டு வெற்றி பெற்ற அந்த அணியினர் அனைவருக்கும் வந்தது. உடனடியாக அந்த நபரை கண்டுபிடிக்க ராஜு கை வசம் வைத்திருக்கும் உலக உருண்டையை எடுத்துக் கொண்டு சத்தியம் வாங்கினார்.

தாய் நாட்டின் மீது சத்தியம்
தப்பு செஞ்சவங்க யாருமே தப்பிக்க முடியாத படி தாய் நாட்டின் மீது சத்தியம் பண்ணுங்க என ராஜு ஒவ்வொருவரிடமும் கேட்க நிரூப் உள்ளிட்ட அனைவரும் சத்தியம் செய்தார்கள். அக்ஷரா என் அம்மா மேல சத்தியமா நான் மாத்தி போடல என சத்தியம் பண்ணார். அப்போதே ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் நிரூப் மீது மட்டும் தான் டவுட் கிளம்பியது.

வருண் திட்டவட்டம்
அந்த ஒரு ஓட்டை மாற்றி போட்ட புண்ணியவான் யார் என கமல் கேட்க, அனைவருமே அது தெரியாம தான் சார் நாங்களே முழிச்சிக்கிட்டு இருக்கிறோம் என சொல்ல, எனக்கு தெரியும் சார் அது நிச்சயம் நிரூப் தான் என வருண் திட்டவட்டமாக நிரூப் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார்.

சரண்டரான நிரூப்
வருண் உறுதியாக சொன்ன நிலையில், கமல் நிரூப்பிடம் கேட்க, ஆமாம் நான் தான் பிரியங்கா அணிக்கு ஓட்டுப் போட்டேன். அவங்க பக்கம் நியாயம் இருந்துச்சு. அந்த அணியும் இந்த அணியில் இணைய நினைச்சாங்க ஆனால், இவங்க சான்ஸ் கொடுக்கல என விளக்க கமல் இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது என அடுத்த பஞ்சாயத்துக்கு பறந்து விட்டார். பிரியங்காவின் மீது இருக்கும் நட்பு காரணமாகத்தான் நிரூப் அவருக்கு ஓட்டு போட்டுவிட்டு என்னம்மா கதை சொல்றாரு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.