காயினை வைத்துக் கொண்டு அட்டூழியம்.. வில்லத்தனத்தை காட்டிய நிரூப்!

சென்னை : நிலத்தின் ஆற்றலை சொந்தமாக்கிய நிரூப், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நெருப்பின் ஆளுமை இருந்தது. இந்த நாணயத்தை வைத்திருந்த இசைவாணி, கிச்சன் ஏரியாவை ஆக்கிரமித்து யாரும் என்னை கேட்காமல் வரக்கூடாது என்று ஆர்டர் போட்டார்.

இசைவாணி, சர்வாதிகாரி போல செயல்படுவதாக இமான் அண்ணாச்சி கூறினார். மற்றவர்களும், நீ பேசுவதும், நடந்து கொள்ளும் முறையும் அப்படித்தான் இருக்கு என்று கூறினார்கள்.

நிலம் வாரம்

நிலம் வாரம்

இதையடுத்து, நிலம் வாரம் என சொல்லி அந்த காயின் வைத்து இருக்கும் நிரூப் நந்தகுமாருக்கு பெட்ரூம் ஏரியாவை கண்ட்ரோல் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரத்தை போல இல்லாமல் இந்த வாரம் பல்வேறு விதிமுறைகளும் போடப்பட்டு இருக்கிறது.

நிரூப்பிற்கு புல் பவர்

நிரூப்பிற்கு புல் பவர்

பெட்ரூம் ஏரியாவில் தனது ஆளுமையை செய்து வரும் நிரூப், விரைவாக ரெடியாகி வெளியே போகும் படி கூறுகிறார். இதையடுத்து, ஒன்... டூ... த்ரீ என கவுண்டன் கொடுக்கிறார் நிரூப். இதனால், பெண்கள் அனைவரும் அவசர அவசரமாக கிளம்புகிறார்கள். ஆனால் , பவானி ,ஸ்ருதி, மதுமிதா நாங்கள் பெண்கள் எங்களுக்கு ரெடியாக நேரம் ஆகும் என்கிறார்.

மூவருக்கும் தண்டனை

மூவருக்கும் தண்டனை

அவர்கள் சொல்வதை காதில் வாங்காத நிரூப் உங்களுக்கு தண்டனை இருக்கு என்று கூறுகிறார். இதையடுத்து, பாகற்காய், பச்சை மிளகாயை சாப்பிடும் தண்டனையை தருகிறார். இதில் பாவனி , ஸ்ருதி, மதுமிதா 3 பேரும் அசால்டாக அந்த தண்டனையை செய்து முடிக்கிறார்கள் .

ரூல்சை மீறிய பிரியங்கா

ரூல்சை மீறிய பிரியங்கா

இதையடுத்து,பிரியங்காக பெடஸ்டரில் காயின் இல்லாத நேரத்தில் உள்ளே வந்த பிரியங்காவை, காயின் இல்லாத நேரத்தில் ஏன் வந்தே என்று கேட்கிறார் . இதற்கு பிரியங்கா வேணும்னு ஏதாவது சொல்லாத நிரூப் என்கிறார். உடனே நிரூப் நீ தான் அடிக்கடி ரூல்ஸ் மீறி உள்ளே வர என்று கோவமாக பேசுகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X