பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு… பிக் பாஸ் வீட்டில் மொக்கை வாங்கிய நிரூப் !
சென்னை : பிக்பாஸ் வீட்டில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், Best player விருதை நிரூப்பும், Best entertainer விருதை ராஜுவுக்கும், அக்ஷராவுக்கு சிறப்பாக உடை அணிந்து இருப்பதாக விருது கொடுக்கப்பட்டது.
முதல் பாகத்தில், பாசிடீவான விருதுகள் அளிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது பாகத்தில் கலாய்ப்பது போல டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களை கடுப்பேத்துவது போல விதவிதமான டைட்டில் கொடுக்கப்பட்டது. இதனால், ஹவுஸ்மெட்டுகள் சற்று கடுப்பானார்கள்.

பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டைட்டில் கொடுக்கப்படுகிறது. இதில் ரிஸ்க் எடுக்குறது எல்லாம் எனக்கு ராஸ்க் சாப்பிடுற மாதிரி என்ற டைட்டிலும், பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு என்ற டைட்டிலை நிரூப்பிற்கு கொடுக்கப்பட்டது.

மொக்கவாங்கிய அபினய்
அந்த சரஸ்வதியே உனக்கு பதில் பரிச்சை எழுதினாக்கூட நீ பாஸாக மாட்டடா என்ற டைட்டிலும், ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட பினிஷிங் சரி இல்லையே பா என்ற பட்டத்தையும் அபினய்க்கு கொடுக்கப்பட்டது.

பண்றது மோசம்
பண்றது மோசம் இதில் பாசம் வேற என்ற டைட்லை மதுமிதா இமான் அண்ணாச்சிக்கு கொடுத்தார். இந்த டைட்டிலை பெற்ற இமான் அண்ணாச்சி, 13 பேரின் பார்வையில் நான் மோசமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

செம டைட்டில்
இதையடுத்து, பவானிக்கு if your bad i'm your dad என்ற டைட்டிலை பிரியங்காவிற்கு வழங்கினார். இதையடுத்து , பேசிய பிரியங்கா என்கிட்ட Badடா நடந்துகிட்ட நான் Badடா இருப்பேன் என்றார்.

தேவையுள்ள ஆணி
நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தானே என்கின்ற டைட்டிலை இசைவாணி ராஜுவிற்கு கொடுத்தார். இதையடுத்து, பேசிய ராஜு அதையும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டு இனிமேல் தேவையுள்ள ஆணியே புடுங்க படும் என்றார் ராஜு.


Click it and Unblock the Notifications











