பாவனியை வெளியேற்ற பக்கா பிளான்.. இந்த அவமானத்துடன் 2வது ஃபைனலிஸ்ட் ஆகணுமா நிரூப்?

சென்னை: சிபி பணப்பெட்டியுடன் வெளியேறிய நிலையில், இந்த வாரம் நிரூப் தான் எவிக்ட் ஆவார் என அன் அஃபிஷியல் கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், பிக் பாஸ் டீம் புதிய பிளானை போட்டு இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப்பை கடைசி வாரத்திற்கு கொண்டு சென்றதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

பாவனியை ஃபைனல்ஸ் அனுப்ப வேண்டும் என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் முடிவு செய்த நிலையில், பாவனியை வெளியேற்ற முடிவு கட்டிய நிரூப் கடைசி வரை ஒத்துழைக்கவில்லை.

செகண்ட் ஃபைனலிஸ்ட்

செகண்ட் ஃபைனலிஸ்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் டஃப் போட்டியாளராக பார்க்கப்பட்ட நிரூப் தற்போது தனது ஸ்ட்ராட்டஜியின் மூலமாக கடைசி வாரத்திற்குள் இரண்டாவது நபராக உள்ளே நுழைந்து விட்டார். ஆனால், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் கழுவி ஊற்றி நிரூப்பை ஃபைனல்ஸுக்கு அனுப்பிய அவமானம் தேவையா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பஸ் டாஸ்க்கிலும்

பஸ் டாஸ்க்கிலும்

இதே போலத்தான் பஸ் டாஸ்க்கிலும் எனக்கு பயமா இருக்கு விட்டுக் கொடுங்க என கெஞ்சி கூத்தாடி நிரூப் அந்த வார நாமினேஷனில் இருந்து வெளியேறினார். இப்போது மீண்டும் வெளியே அனுப்பினாலும் சரி கடைசி வாரத்திற்கு அனுப்பினாலும் சரி கண்டபடி கழுவி ஊற்றி என்னை எப்படியாவது ஃபைனல்ஸ்க்கு அனுப்பிடுங்க என வடிவேலு காமெடியில் சொல்ற மாதிரி இறங்கி இறுதி சுற்றுக்கு நுழைந்து விட்டார்.

பாவனியை வெளியேற்ற

பாவனியை வெளியேற்ற

அமீர், ராஜு, பிரியங்கா எல்லாரும் சேர்ந்து பாவனியை எப்படியாவது இறுதி வாரத்திற்கு அனுப்பிவிடுவோம் என முடிவு கட்டி பாவனியின் தலையில் எந்தளவுக்கு அவரை அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி தண்ணீர் ஊற்றினார்கள். ஆனால், கடைசியாக நிரூப் மட்டும் ஊத்தவே மாட்டேன் என ஒற்றைக் காலில் நின்று தனக்கே அனைவரையும் ஊற்றும்படி கோல்மால் செய்து கேவலமான ஸ்ட்ராட்டஜி மூலம் ஜெயித்து விட்டார் என நெட்டிசன்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.

தகுதியில்லாதவர்கள்

தகுதியில்லாதவர்கள்

டிக்கெட் டு ஃபினாலேவை காலில் அடிபட்டதாக அமீரை டிராமா போடச் சொல்லி பிக் பாஸ் டீம் கொடுத்தது என்றும் நிரூப்பை கழுவி ஊற்றி அவர் பாவங்களை சுத்தம் செய்து ஃபினாலேவுக்கு அனுப்பும் முயற்சியையும் பிக் பாஸ் டீம் தற்போது எடுத்துள்ளதாக தகுதியில்லாத இருவரை இறுதி வாரத்திற்குள் அனுப்ப ஃபேவரிஸம் காட்டி உள்ளது பிக் பாஸ் டீம் என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க

எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்க

எப்படியும் இந்த வாரம் நாம் எவிக்ட் ஆகி வெளியே போய்விடுவோம் என நினைத்த நிரூப் பிரியங்கா சொன்னதை போல வெட்கம், மானம், சூடு, சொரணை என அனைத்தையும் விட்டு விட்டு தண்ணீர் ஊற்ற வைத்து இந்த வார எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப் ஆகி விட்டார்.

பாவனியா தாமரையா

பாவனியா தாமரையா

நிரூப் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாவனி அல்லது தாமரை இருவரில் ஒருவர் வெளியேற போவது உறுதியாகி விட்டது. தாமரைக்கு மக்கள் சப்போர்ட் அதிகரித்து வரும் நிலையில், பாவனி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆகி வெளியேற போகிறார் என தெரிகிறது. பாவம் பாவனி ஆர்மியினர் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X