நமக்கு எப்போவுமே யாஷிகாதான் ஃபேவரைட்.. எக்ஸ் காதலியை நினைத்து மீண்டும் பிக்பாஸில் உருகிய நிரூப்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் யாஷிகாவை நினைத்து உருகியுள்ளார் நிரூப்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நிரூப். ஆறடிக்கு மேல் வாட்ட சாட்டமாக இருக்கும் நிரூப் பிஸிக்கல் டாஸ்க்கை எல்லாம் அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரிடமும் பழக ஆசைப்படுகிறார் நிரூப். ஆனால் பிரியங்காவோ நிரூப் தனக்கு மட்டும்தான் நண்பராக இருக்க வேண்டும் என ரொம்பவே பொஸஸ்ஸிவ்வாக உள்ளார்.

யாஷிகாவின் எக்ஸ் காதலர்

யாஷிகாவின் எக்ஸ் காதலர்

நிரூப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதுமே அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளருமான யாஷிகா ஆனந்தின் எக்ஸ் காதலர் நிரூப் என கூறப்பட்டது. யாஷிகா ஆனந்தும் நிரூப்பும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியானது.

யாஷிகா லைவ் வீடியோ

யாஷிகா லைவ் வீடியோ

மேலும் யாஷிகா ஆனந்தும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தாவும் தங்களின் ஓராண்டு நட்பை ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி பண்ணி செலிபிரேட் செய்தனர். தங்களின் கொண்டாட்டத்தை சமூக வலைதள பக்கம் மூலம் ரசிகர்களுடனும் பகிர்ந்து கொண்டனர்.

நேரலையில் லிப்லாக் கொடுத்த நிரூப்

நேரலையில் லிப்லாக் கொடுத்த நிரூப்

அப்போது அந்த பார்ட்டியில் பங்கேற்ற நிரூப், எதிர்பாராத விதமாக லைவ்வில் யாஷிகாவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தார். அந்தக் காட்சியும் வைரலானது. அதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்பது உறுதியானது. ஆனால் அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 5ல்...

பிக்பாஸ் சீசன் 5ல்...

இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமியுடனும் நிரூப் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. இதனால் அபிராமியுடனும் நிரூப் காதல் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிரூப் அடிக்கடி யாஷிகா குறித்து நினைவு கூர்ந்து வருகிறார்.

ஏமாந்து போயிருக்கேன்..

ஏமாந்து போயிருக்கேன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே யாஷிகாவின் எக்ஸ் பாய் ஃபிரண்ட் என அறிமுகப்படுத்திக் கொண்ட நிரூப், அவரால் தான் இந்த இடத்திற்கு வந்ததாக கூறினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் டிவி டாஸ்க்கின் போது பலரை நம்பி ஏமாந்து போயிருக்கிறேன் என மனக்கவலையை கொட்டித் தீர்த்தார்.

Recommended Video

YASHIKA is BACK | First Exclusive Selfie Interview after Discharge, Yashika Anand
எப்போவுமே யாஷிகாதான் ஃபேவரைட்

எப்போவுமே யாஷிகாதான் ஃபேவரைட்

பின்னர் டிவி டாஸ்க்கின் போது ஆட்டோ டிரைவராக மாறிய நிரூப்பிடம், பிக்பாஸில் உங்களுடைய ஃபேவரைட் கன்டெஸ்ட்டன்ட் யார் என்று கேட்டார். அதற்கு நமக்கு எப்பவுமே யாஷிகாதான் ஃபேவரைட் என்று கூறினார் நிரூப். நிரூப் கூறியதை கேட்ட நெட்டிசன்கள், இன்னமும் எக்ஸ் காதலியை மறக்கவில்லையா பாஸ் என கேட்டு வருகின்றனர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் யாஷிகா

இயல்பு நிலைக்கு திரும்பும் யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூன் மாதம் புதுச்சேரி சென்று விட்டு திரும்பிய போது கார் விபத்தில் சிக்கினார். இதில் தோழியை பறிகொடுத்த யாஷிகா, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 6 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X