ஏய்… ஜெர்மனி குச்சி… மதுமிதாவை பங்கமாக கலாய்த்த நிரூப் !
சென்னை : பிக்பாஸ் வீட்டுக்குள் பஞ்சதந்திர டாஸ்க் ஒருவழியாக முடிந்தது.
இந்த டாஸ்கில் அனைவரும் நண்பர்களுக்கான காயின்களை எடுத்துக் கொடுத்து உதவினர். சிலர் காயின்களை தங்களுக்காக எடுத்து வைத்துக்கொண்டனர்.
பஞ்சதந்திரம் என்கிற இந்த டாஸ்க்கில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய கருப்பொருட்களில் தங்களுடன் ஒத்துப்போவது எது? இன்னொருவரை இந்த பஞ்ச பூதங்களில் எவற்றுடன் ஒப்பிடலாம்? ஏன்? என போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசினர்.

நிம்மதியான தூக்கம்
கடந்த 3 நாட்களாக நடந்த பஞ்சதந்திர டாஸ்க நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, போட்டியாளர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தனர். இதில் அனைவரும் தூங்கிய போது மதுமிதா மற்றும் அபினய் மட்டும் தூங்காமல் கையில் ஃபோமை வைத்துக்கொண்டு அண்ணாச்சிக்கு முகத்தில் அடித்தனர்.

அடிவாங்குவா
இதையடுத்து, தூங்கிக்கொண்டிருந்த நிரூப்பின் முகத்தில் ஃபோமை அடித்தார் மதுமிதா. உடனே விழித்துக்கொண்ட நிரூப், மதுமிதாவை அடிவாங்குவா ஓடிடு என்கிறார். அப்போது அங்கு வந்த பிரியங்காக அண்ணாச்சி மீது இருக்கும் காண்டை தீர்த்துக்கொள்ளும் விதமாக அவரின் காலில் ஃபோமை அடித்து விட்டு போய் விடுகிறார்.

ஜெர்மனி குச்சி
காலையில், மதுமிதாவிடம் ஃபோம் அடித்தது குறித்து பேசிய கேட்ட நிரூப் என் தலை மூடியில் அடிச்சிட்டு போய்டா என்கிறார். அதற்கு மதுமிதா... என் உன் முகத்தில் தான்அடிச்சேன்... நீ தலையில் ஆக்கிடா என்று கூறுகிறார். இதையடுத்து நிரூப் ஏய்... ஜெர்மனி குச்சி அப்படியே உன்னை உடைச்சி போட்டுடுவேன் என்று கூறினார்.

அழகாக தமிழ்
மதுமிதா உடனே, தைரியம் இருந்த வா என்கிறார்...அதிகம் பேசாமல் இருந்த மதுமிதா இன்றைய எபிசோடில் அழகாக பேசி உள்ளார். அவர் கொஞ்சி கொஞ்சும் பேசும் தமிழை இன்னைக்கு எல்லாம் உங்காந்து கேட்கலாம் போல அவ்வளவு அழகா இருக்கு.


Click it and Unblock the Notifications











