பிக்பாஸ் வீட்டில் வரம்பு மீறி பேசும் நிரூப்… டென்ஷனான அபினய்!

சென்னை : பிக் பாஸ் வீட்டில் நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை 2.0 டாஸ்கின் போது நிரூப் அபினய்யிடம் வரம்பு மீறி பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கியதில் இருந்தே போட்டியாளர்கள் ஒரே குடும்பம் போல செயல்பட்டு வந்தனர். இந்த சீசனில் சண்டை சச்சரவுக்கு இடமே இல்லை என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனுசரணையாக இருந்ததை பார்த்ததும் அடடா...என்று பலர் ஆச்சரியப்பட்டு பார்த்து வந்தனர். யார் கண்ணு
பட்டுச்சோ இரண்டு நாளாக வீட்டில் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.

நீயும் பொம்மை நானும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

இதையடுத்து, இன்று நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க்கின் 2.0 வில், ஒவ்வொரு நபராக பிளாஸ்மா முன் நின்று உங்கள் பார்வையில் இந்த வீட்டில் இருக்கிற நபர்களில் யார் அவர்களே சொந்தமாக யோசித்து சுய புத்தியோடு செயல்படுகிறார்கள், யார் சுயபுத்தி பயன்படுத்தாமல் வேறு ஒரு நபரின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதையும் காரணங்கள் சொல்லி விளக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

கூட்டு சேராது

கூட்டு சேராது

அப்போது, இசைவாணி, நிரூப்பின் பொம்மையை காண்பித்து இந்த பொம்மை யாருடனும் கூட்டு சேராது தானாக விளையாடும் என்றால், ஆனால், இந்த கேமின் போது ஐக்கி பெர்ரியை கைப்பாவையாக செயல்படுத்தி விளையாடினார் என்றார். உடனே குறிப்பிட்ட நிரூப், நீ அபினய்யின் கைபாவையாக இருந்தியா என்று கேட்டார்.

வரம்பு மீறி பேசும் நிரூப்

வரம்பு மீறி பேசும் நிரூப்

அபினய் குறுக்கிட்டு, இதே கேள்வியை நீ அனைவரிடத்திலும் கேட்க வேண்டும் என்றார். கோவத்தின் உச்சத்திற்கு சென்ற நிரூப், அபினய்யை பார்த்து நீ மூடிட்டு அப்படியே இரு என்றார். இதனால் கோவம் அடைந்த அபினய் மூடிட்டு இருற... என்ன வார்த்தை பேசுறா கேட்டார். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக திட்டிக்கொண்டனர்.

வாய்க்கு வந்தபடி

வாய்க்கு வந்தபடி

நேற்றைய டாஸ்கின் போதும் சிபி, அக்ஷ்ரா இடையே வாய் தகராறு ஏற்பட்டு கெட்டவார்த்தை பேசி மியூட் போடும் அளவுக்கு வீட்டில் களேபரம் ஆனது. நேற்றைய சண்டைக்கும் நிரூப்பின் செயல்தான் காரணம் இன்றும் அனைவர் இடத்திலும் நான் செய்வதுதான் சரி என்பது போல வாய்க்கு வந்த வார்த்தைகளை நிரூப் பேசிவருகிறார். இதனால், இத்தனை நிரூப்பிற்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் கூட அவரின் செயலை கண்டித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X