பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிரூப்.. ராஜு அம்மா, தாமரை, ஐக்கியுடன் செம போஸ்!

சென்னை: பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் 5வது இடத்தில் நிரூப் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

105 நாட்களுக்குப் பிறகு வெளி உலகை பார்க்கும் நிரூப்பின் அட்டகாசமான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராஜுவின் அம்மா, தாமரை, ஐக்கி பெர்ரி மற்றும் நாஞ்சில் சம்பத் உடன் நிரூப் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

பட்டாசு மேடையில் நிரூப்

பட்டாசு மேடையில் நிரூப்

சனிக்கிழமை எபிசோடில் பட்டாசு மேடையில் நிரூப் சந்தோஷத்தின் உச்சியில் நின்றார். இது போன்ற விஷயங்களை எல்லாம் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை பிக் பாஸ் என நிரூப் கூறினார். பிசிக்கல் டாஸ்க் பிளேயரான நிரூப் கடைசி வரை கேம் ஆட வேண்டும் என்கிற சிந்தனையுடன் விளையாடிய பயண வீடியோக்கள் காட்டப்பட்டது. கடைசியாக பரிசாக தனது காயினை எடுத்துக் கொண்டார்.

அவுட்டான நிரூப்

அவுட்டான நிரூப்

கடைசி நாள் வரை தாக்குப் பிடித்து இருந்து விட்ட நிரூப் பிக் பாஸ் டைட்டிலை எப்படியாவது வென்று விடலாம் என ஏகப்பட்ட பிளான்களையும் மைண்ட் கேமையும் ஆடி வந்தார். ஆனால், மக்கள் நிரூப்புக்கு அந்தளவுக்கு ஓட்டுக்களை போடாமல் அவரை 5வது இடத்தில் எவிக்ட் செய்துள்ளனர்.

ராஜுவின் அம்மாவுடன்

ராஜுவின் அம்மாவுடன்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜுவின் அம்மாவுடன் பிக் பாஸ் செட்டுக்கு வெளியே நிரூப் நந்தகுமார் சக போட்டியாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ராஜுவின் அம்மாவுடன் நிரூப்பை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஐக்கி பெர்ரி ஆஜர்

ஐக்கி பெர்ரி ஆஜர்

இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து உள்ளிட்ட சில எவிக்ட் ஆன போட்டியாளர்கள் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் கலந்து கொள்ள முடியாத நிலையில், ஐக்கி பெர்ரி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது இந்த புகைப்படத்தின் மூலம் தெளிவாகி உள்ளது. செம க்யூட்டான காஸ்ட்யூமில் ஐக்கி பெர்ரி அசத்தி உள்ளார்.

தாமரையாக நாஞ்சில் விஜயன்

தாமரையாக நாஞ்சில் விஜயன்

நிரூப் அருகே தாமரை செல்வியும் இருக்கிறார். அவரை போலவே சேலை அணிந்து நெற்றியில் பட்டையை போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நாஞ்சில் சம்பத் தாமரை செல்வியாக நடித்து பட்டையை கிளப்ப போகிறார் என்றும் அதை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நிரூப்பும் வின்னர் தான்

நிரூப்பும் வின்னர் தான்

105 நாட்களை பல தடைகளை கடந்து விளையாடி ஜெயிக்க வேண்டும் என நினைத்து கடைசி வரை இதை ஒரு கேமாக மட்டுமே பார்த்து எந்தவொரு எமோஷனலுக்கும் இடம் கொடுக்காமல் விளையாடிய நிரூப்பும் இந்த சீசனில் வின்னர் தான் என பிக் பாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X