லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் நிரூப் வெற்றி…. பக்காவா போட்ட பிளான் வீண் போகல !
சென்னை : நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றார்.
நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை டாஸ்கில், ஒவ்வொருவரும் மற்றவர்களின் வெற்றிக்காக விளையாட வேண்டும். ஒரு போட்டியாளர் தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்ட பொம்மையை எடுக்கக்கூடாது.
மாறாக தனக்கு வேண்டிய போட்டியாளரின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி கூடாரத்திற்குள் நுழைய வேண்டும். கடைசியாக வருபவரின் கையில் உள்ள பொம்மையில் யார் பெயர் உள்ளதோ, அவர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். இறுதியில் மிஞ்சுபவர் வெற்றி பெறுவார்.

பக்க பிளான்
விளையாட்டின் தந்தித்தை புரிந்து கொண்ட போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டு விளையாடினார்கள். ராஜூ மற்றும் நிரூப்பை காப்பாற்ற இமான் முடிவு செய்தார். அபினய், இசையுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார். நிரூப் மற்றும் ஐக்கிக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து கையெழுத்தானது. இதில் முதல் ஆளாக பிரியங்கா வெளியேறினார்.

சண்டை
இந்த விளையாட்டின் போது, அக்ஷராவை பிடித்து இழுத்தால், நிரூப் மற்றும் வருண் இடையே தள்ளுமுள்ளு கைகலப்பு வரை பிரச்சினை போனது. இதையடுத்து, அக்ஷரா, வருண் , தாமரை, பாவனி என ஒவ்வொருவராக போட்டியிலிருந்து வெளியேறினார்கள்.

நிரூப் வெற்றி பெற்றார்
இறுதிவரை வெளியேறாமல் நிரூப் மற்றும் ஐக்கி பெர்ரி இருந்தனர் பெல் அடித்ததும் நிரூப்பின் பொம்மையை எடுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடினார் ஐக்கி. அவர் பின்னால் நிரூப் கடைசியாக ஓடினார். இதையடுத்து பொம்மை டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பொம்மை டாஸ்க் முடிந்தது
இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் இத்துடன் முடிந்ததாக பிக் பாஸ் அறிவித்தார். டாஸ்கில் வெற்றிபெற்றதற்காக நிரூப்பிற்கு லக்சரி பட்ஜெட் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதை நிரூப் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வீட்டில் இருக்கும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பிக் பாஸ் கூறினார்.


Click it and Unblock the Notifications











