அக்கா எனக்கு அம்மா மாதிரி... இப்போ தான் அருமை புரியுது.. நிரோஷா நெகிழ்ச்சி !

சென்னை : என் அக்கா எனக்கு அம்மா மாதிரி அவங்க சொன்ன அட்வைசை கேட்க முயற்சி பண்றேன் என்று நிரோஷா கூறியுள்ளார்.

Recommended Video

இதோ உங்களைத் தேடி மீண்டும் வந்தாச்சு 'தங்கம்'!

சினிமா துறையில் பொதுவாக அக்கா, தங்கை இருவரும் வலம் வந்தாலும் , யாராவது ஒருவரே சினிமாவில் வெற்றி பெறுவார்கள். ஆனால் சிலர் அதையும் மீறி வெற்றி பெற்றவர்கள் உண்டு. அந்த வரிசையில் ராதிகா, நிரோஷா வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் வெற்றி பெற்றார்கள்.

Nirosha has said that Radhika is a mother to me

அக்கா ஒரு பக்கம் சீரியலில் பிஸியாக இருந்தாலும் , நேரம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு அட்வைஸ் தான் பண்ணுவாங்க. ஷூட்டிங் இருந்தா நாங்க பேச கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்போம். இப்போ தான் கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கு என்று சிரிக்கிறார் நிரோஷா .

சில காலகட்டம் வரைக்கும் ஹீரோயின்னாக கலக்கி வலம் வரும் நடிகைகள் தனது ட்ரெண்ட் முடிந்த பிறகு சீரியலில் வருவது ஒன்றும் புதிதல்ல. குஷ்பு ,மீனா , ரேகா போன்ற பலர் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த பட்டியலில் சிலர் நடிப்பு , இயக்கம் போன்ற துறைகளில் மட்டும் அல்லாமல் தயாரிப்பிலும் கெட்டிக்காரர்களாக உள்ளனர் ..

ராதிகா சித்தி, சித்தி 2 என்று கலக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் தங்கை நிரோஷாவோ "உயிரே " சீரியல் மூலம் தயாரிப்பாளராக வலம் வருகிறார். என் புதிய முயற்சிக்கு தூண்டுதலாக இருந்தது என் அக்கா மட்டும் தான் என்று நிரோஷா பெருமையுடன் சொல்கிறார். 60 எபிசோடுகளை கடந்த நிலையில் இந்த அனுபவம் புதிதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Nirosha has said that Radhika is a mother to me

சிலசமயங்களில் அக்கா சொன்ன அறிவுரைகள் எனக்கு பிடிக்காமல் போனதுண்டு ஆனால் இப்போ தான் அதன் அருமை எனக்கு புரிகிறது .என் அக்கா சீரியல் பணியாற்றுவதை நேரில் பார்த்தேன் அப்போ தான் இதில் எவ்ளோ வேலைகள்,நெளிவு சுளிவுகள் இருப்பதை நான் உணர்ந்தேன் ..

நடிகையா இருக்கிறவரைக்கும் நடிச்சோமா முடிச்சோமா என்று மட்டும் தான் இருப்போம் ஆனால் இப்போ தான் அதன் கஷ்டம் புரிகிறது . என் லைப்ல என் பேர் சொன்னா தெரியுறதுக்கு முக்கியமான காரணம் என் அக்கா மட்டும் தான் சின்ன தப்பு நடிப்புல இருந்தா கூட அவ்ளோ திட்டுவாங்க. அப்பறம் வழக்கம் போல் அக்கா தங்கை சண்டை தான், நான் அக்கா கூட பேசவே மாட்டேன்.

அவங்க ஆக்ட்டிங் பாத்து நான் வியந்து இருக்கேன். நான் நல்லா நடிச்சா என்னை பாராட்டுவாங்க, அவங்க எனக்கு அம்மா மாதிரி அவங்க சொல்றத கேட்க நான் ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கேன். இப்போ சீரியல் ஷூட்டிங் நடக்காததுனால நல்லா ரெஸ்ட் எடுக்கிறோம். என் கணவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கிறேன். மறுபடியும் தன் கணவருடன் சேர்ந்து நடிக்க சான்ஸ் கிடைத்தால் நடிப்போம் என்று கூறினார். கொரோனா எப்போ போகும் மக்கள் எப்போ சகஜ நிலைக்கு திரும்புவாங்கனு எதிர்ப்பாத்துட்டு இருக்கோம்.

Nirosha has said that Radhika is a mother to me

நடிகை நிரோஷா,யோகிபாபு இருவரும் சேர்ந்து நடித்த கொரோனா விழிப்புணர்வு விளம்பரம் பெரிய அளவில் பேச படுவதாலும், கலர்ஸ் தமிழில் தமிழ் சீரியல் தயாரிப்பில், வெற்றி பெற்றதாலும் இவர் தொடும் அனைத்துமே வெற்றிதான் என்று சின்ன திரையில் ஒரு செய்தி வேகமாக பரவுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X