Nirosha: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வுக்கு வந்த நிரோஷா.. லால் சலாம் படத்துக்கு பிறகு அடித்த ஜாக்பாட்!
சென்னை: நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகளும் நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரியுமான நிரோஷா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் மூர்த்தி என மக்கள் மனங்களில் பதிந்துள்ள நடிகர் ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்கிற போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் இளம் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை ஏங்க வைத்த நிரோஷா மீண்டும் நடிப்பில் தனது ஆர்வத்தை அதிகரித்து ஸ்பீட் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: 2018ல் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுமார் 5 ஆண்டுகள் ஏகப்பட்ட மாற்றங்களுடன் ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக ஓடி வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்தது. மூத்த அண்ணன் மூர்த்திக்கும் அவரது தம்பிகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டமாக ஆனந்தம் படத்தின் கதையை அடிப்படையாக கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் ஒன்று உருவாகி இருந்தது.
மூன்று முல்லை: குமரனுக்கு ஜோடியாக முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் காவ்யா அறிவுமணி முல்லையாக நடித்தார். சினிமா சான்ஸ் கிடைக்க அவரும் கிளம்பிய நிலையில், கடைசியில் லாவண்யா முல்லையாக நடித்திருந்தார்.

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் 2: பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மூர்த்தியாக நடித்த ஸ்டாலினை தவிர அனைவருமே 2ம் பாகத்தில் புதிய ஆட்கள் தான். இந்த முறை எம் மகன் கதையை அடிப்படையாக கொண்டு தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டக் கதையாக உருவாகும் என தெரிகிறது. அதன் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா 2 போல பாதியில் முடியாமல் தொடர்ந்தால் நல்லா இருக்கும் எனக் கூறுகின்றனர்.
நிரோஷா: மூர்த்திக்கு ஜோடியாக சுஜிதா நடித்து வந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு தற்போது நிரோஷா மூர்த்தியின் மனைவியாக மாறியுள்ளார். லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே சின்னத்திரை ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க ரெடியாகி விட்டார் நிரோஷா.


Click it and Unblock the Notifications











