Nirosha: கணவர் தோளில் சாய்ந்துக் கொண்டு நிரோஷா கொடுத்த சூப்பர் போஸ்.. அந்த கேப்ஷன் தான் வேறலெவல்!
சென்னை: நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகை நிரோஷா தற்போது தனது கணவர் தோளில் சாய்ந்தபடி கொடுத்த சூப்பர் போஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நடிகவேள் எம்.ஆர். ராதாவின் இளைய மகள் தான் நிரோஷா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 52 வயதாகும் நிரோஷா பல காலமாக நிறைவேறாத தனது கனவு லால் சலாம் படத்தின் மூலம் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்து நிறைவேறி விட்டதாக சமீபத்தில் சொல்லியிருந்தார்.

மேலும், விஜய் டிவியின் ஃபேவரைட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2ம் பாகத்தில் நடிகர் ஸ்டாலினின் மனைவியாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
என்றும் நிரோஷா: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் அறிமுகமானாவர் நிரோஷா. சூரசம்ஹாரம், செந்தூரப்பூவே, பாண்டி நாட்டு தங்கம், மருது பாண்டி, பச்சைக்கொடி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிரோஷா மாதவன், ஜோதிகா நடித்த பிரியமான தோழி படத்தில் குணசித்ர நடிகையாக மாறிவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: விஜய் டிவியில் அதிக டிஆர்பி ரேட்டிங்குடன் ஓடிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் சமீபத்தில் தொடங்கியது. அதில் லீடு ரோலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். முன்னதாக சின்ன பாப்பா பெரிய பாப்பா, சந்திரகுமாரி, வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
லால் சலாம் படத்தில்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் ரஜினியின் மனைவியாக நிரோஷா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசன் உடன் சூரசம்ஹாரம் படத்தில் அப்பவே ஜோடி சேர்ந்த நிரோஷாவால் ரஜினியுடன் இணைந்து நடிக்க முடியாமல் போன நிலையில், பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ராம்கி தோளில் சாய்ந்து: தனது கணவர் ராம்கியுடன் போட்டோக்களை வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், திடீரென அவரது தோளில் சாய்ந்தபடி நிரோஷா வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படம் தற்போது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ”There is no path to happiness; happiness is the path.” என சந்தோஷத்தை அடைய செல்லும் வழி என எதுவும் இல்லை சந்தோஷம் தான் வழியே என கேப்ஷன் போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











