Nirosha: எம்.ஆர். ராதா மனைவியை பார்த்து இருக்கீங்களா? அம்மாவின் போட்டோக்களை வெளியிட்ட நிரோஷா!
சென்னை: நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள் நிரோஷா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்கள் முதல் சமீபத்திய புகைப்படங்கள் என பல அற்புதமான தருணங்கள் அடங்கிய போட்டோ தொகுப்பை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னிநட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் எம்.ஆர். ராதாவின் மகள் நிரோஷா.

நைட்டியுடன் நேற்று சோகமாக ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்த நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
எம்ஆர் ராதா மகள்: மறைந்த பழம்பெரும் நடிகர் எம்ஆர் ராதாவின் மகளும் நடிகை ராதிகாவின் தங்கையுமான நிரோஷாவும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.

நடிகர் ராம்கியை திருமணம் செய்துக் கொண்ட நிரோஷா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவின் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நிரோஷாவின் அம்மா: எம்.ஆர். ராதாவின் மனைவியும் நிரோஷாவின் அம்மாவுமான கீதா ராதாவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டு 'ஐ லவ் மை மாம்; என பதிவிட்டுள்ளார்.

என்னுடைய அம்மா மிகவும் ஸ்ட்ராங்கான அம்மா. மேலும், என் சகோதரிகளும் வலிமையானவர்கள். பெண்களின் வலிமை மற்றும் ஆற்றல் மீது எனக்கு எப்பவுமே மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. அனைத்து அம்மாக்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என நடிகை நிரோஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குழந்தையா எவ்ளோ க்யூட்டாக இருக்காங்க நிரோஷா: ஒரு பூங்காவனம் என அக்னி நட்சத்திரம் படத்தில் நடித்த நிரோஷா செந்தூரப்பூவே, இணைந்த கைகள், வெற்றிப் படிகள் உள்ளிட்ட படங்களில் ராம்கியுடன் நடித்துள்ளார். கந்தா கடம்பா கதிர்வேலா படம் வரை ஹீரோயினாக நடித்து வந்த நிரோஷா நடிகர் மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான பிரியமான தோழி படத்தில் லிவிங்ஸ்டனுக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அதன் பின்னர், சீனியர் நடிகையாக குணசித்ர வேடங்களிலேயே நடிக்க ஆரம்பித்தார் நிரோஷா. நடிகை நிரோஷாவை இளம் வயதில் அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அவர் அம்மாவுடன் கைக்குழந்தையாக இருக்கும் அரிய புகைப்படங்களையும் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ராதிகா இளம் வயதில் எப்படி இருக்காரு பாருங்க: அம்மா கீதாவுடன் இளம் வயதில் எடுத்துக் கொண்ட போட்டோவையும் நிரோஷா தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ள நிலையில், அவரது அக்கா ராதிகா எவ்ளோ அழகா இளம் வயதில் இருக்காரு பாருங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு நிரோஷாவுக்கும் அவரது அம்மாவுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




Click it and Unblock the Notifications











