காஜல் அகர்வால் சீக்கிரமா குழந்தை பெத்துக்க போறாங்களா? என்ன தங்கச்சி இப்படி சொல்லிட்டாங்களே!

சென்னை: நடிகை காஜல் அகர்வாலின் 36வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கணவர் கெளதம் மற்றும் தங்கை நிஷாவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீக்கிரமே காஜல் அகர்வால் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தனது சுயநல ஆசையை நடிகையும் காஜல் அகர்வாலின் தங்கையுமான நிஷா அகர்வால் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கணவருடன் கேக் கட்டிங்

கணவருடன் கேக் கட்டிங்

துப்பாக்கி, கோமாளி என தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகை காஜல் அகர்வாலின் 36வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்தினர். கணவர் மற்றும் தங்கை நிஷாவுடன் காஜல் அகர்வால் கேக் வெட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை

காஜல் அகர்வாலுக்கு குழந்தை

பிறந்தநாள் அன்று தனது அக்கா காஜல் அகர்வாலை வாழ்த்திய தங்கை நிஷா அகர்வால் சீக்கிரமே அக்கா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற தனது கோரிக்கையை வைத்துள்ளார். மேலும், அதில் ஒரு சுயநலமும் உள்ளதாகக் கூறியுள்ளார்.

தங்கையின் சுயநலம்

தங்கையின் சுயநலம்

அப்படி என்ன சுயநலம் தெரியுமா? ஏற்கனவே காஜல் அகர்வால் நிஷா அகர்வாலின் 3 வயது குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகின. அந்த குழந்தையுடன் கூட சேர்ந்து விளையாட உடனடியாக ஒரு குழந்தை தேவைப்படுகிறதாம். அதனால் தான் இவர்கள் இருவரையும் இப்பவே அர்ஜென்ட் செய்கிறாராம்.

Recommended Video

Kajal Agarwal சினிமாவிலிருந்து வெளியேறுகிறார்? | Kajal தரப்பு விளக்கம் | #KajalQuitsCinema
காஜல் திருமணம்

காஜல் திருமணம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார் நடிகை காஜல் அகர்வால். திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் குழந்தைக்கான பிளானை பண்ண சொல்லி தங்கை சொல்லி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

படங்கள் இருக்கே

படங்கள் இருக்கே

கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காஜல் அகர்வால் நடிப்பில் ஹேய் சினாமிகா உள்ளிட்ட சில படங்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளன. இந்நிலையில், இப்போதைக்கு காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலின் விருப்பத்தை நிறைவேற்றுவது சற்றே கடினமான விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X