துப்பாட்டாவை திருவோடாக்கி பிச்சை எடுத்த நிஷா அன்ட் அர்ச்சனா.. ஃபேஸ் வாஷுக்கு கூட வழியில்லையாம்!

சென்னை: பாலா செய்த காரியத்தால் பிக்பாஸிடம் நிஷாவும் அர்ச்சனாவும் பிச்சையெடுக்க தொடங்கி விட்டனர்.

பிக்பாஸின் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் பாலாஜி செம சொதப்பல் சொதப்பிவிட்டார்.

இதனால் பிக்பாஸ் வீட்டின் லக்ஸரி பட்ஜெட்டுக்கான பாயிண்ட்ஸ் கட் செய்யப்பட்டுவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள் ஹவுஸ்மெட்ஸ்.

பிக்பாஸிடம் பிச்சை

பிக்பாஸிடம் பிச்சை

இதனை வெளிப்படுத்தும் வகையில் அர்ச்சனாவும் நிஷாவும் தாங்கள் அணிந்திருக்கும் துப்பட்டாவை திருவோடாக்கி பிக்பாஸிடம் பிச்சை கேட்டனர். பிக்பாஸ் கொஞ்சம் கருணை காட்டுங்கள் பிக்பாஸ் என்று கெஞ்சினர்.

துணி சோப்பு போட்டு..

துணி சோப்பு போட்டு..

கறிய கண்ணுல காமிச்சு ரெண்டு வாரம் ஆச்சு பிக்பாஸ். சிக்கன காட்மாட்றாங்க என்று கூறுகிறார் நிஷா. அதற்கு வர சன்டே மட்டன் கொடுக்க சொல்லு என்று நிஷாவிடம் கேட்கிறார் அர்ச்சனா. தொடர்ந்து பேசும் நிஷா, ஃபேஸ் வாஷ் கூட இல்ல பிக்பாஸ் துணி சோப்பு போட்டு முகம் கழுவினேன் என்றார்.

உம்மா கொடுத்த அர்ச்சனா

உம்மா கொடுத்த அர்ச்சனா

பிக்பாஸ் நீங்கள் எதுமே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் ஒன்று உங்களுக்கு கொடுக்கிறேன். அதை மனசுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு என்னுடைய தீபாவளி பரிசு பிக்பாஸ்.. ஐ லவ் யூ பிக்பாஸ்.. உம்மா.. என்றார்.

குதூகலத்துக்கு குறைவில்லை

குதூகலத்துக்கு குறைவில்லை

என்னதான் பிக்பாஸ் வீடு ரணகளமானாலும் ஆரம்பத்தில் இருந்தே அதகளம் செய்து வருபவர் நிஷா. யார் எப்படி கலாய்த்தாலும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு ரணகளம் செய்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸிடம் கெஞ்சும் போது கூட குதூகலத்துக்கு குறைவில்லாமல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X