ஈஸியாய் கோர்த்துவிட்ட அனிதா.. அடிப்பது போல் பாய்ந்த நிஷா.. மிரட்டல் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டவது புரமோ அலற வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் இந்த வாரம் யார் சுவாரசியம் கம்மியான போட்டியாளர் என்ற நாமினேஷன் நடைபெறுவது தெரியவந்தது.
இதில் ஆரியையும் அனிதாவையும் அர்ச்சனா மற்றும் அவரது குழுவினர் கட்டம் கட்டினர். இருவரையுமே பெரும்பாலானோர் டார்கெட் செய்தது தெரியவந்தது.

கோர்த்துவிடுவது போல்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் அனிதா இரண்டு பேரை நாமினேட் செய்கிறார். அப்போது பேசும் அனிதா, எல்லாரும் ஒவ்வொரு பேரை வச்சுட்டு என்னை சொல்ல சொன்ன போதே ஏதோ கோர்த்து விடுவது போல் தெரிந்தது.

அடிப்பது போல் பாய்ந்து
அதற்காக ரியோவை நாமினேட் செய்கிறேன் என்றார். இதனைக் கேட்டு நிஷாவும் ரியோவும் ஆவேசமாகிறார்கள். அப்போது பேசும் நிஷா மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணாத அனிதா என்று கூறியப்படியே அடிப்பது போல் பாய்ந்து அனிதாவுக்கு அருகில் வருகிறார்.

பாஸ்ஸி ரோபோ
அப்போது இது பர்சனல் ரீசன் கிடையாது, கேம் ரீசன்தான் சொல்லியிருக்கேன் என்று கூறும் அனிதா ஐடியாலாம் நீங்கதான் கொடுத்தீங்க என்கிறார். ஆனால் நெருங்கி வரும் நிஷா நானா பாஸ்ஸி ரோபோன்னு பேர் வச்சேன் என்கிறார்.

என்ன ட்ரை பண்ற அனிதா?
தொடர்ந்து அனிதாவிடம் ஆவேசமாக ஆர்க்யூ பண்ணும் நிஷாவை பாலாஜி ஆசுவாசப்படுத்துகிறார். ஆனால் அவரிடமும் விட்றா என எகிறுகிறார் நிஷா. அப்போது பேசும் ரியோ, நீ என்ன அனிதா ட்ரை பண்ற என கேட்டு நிஷாவுக்கு ஆதரவாக பேசுகிறார்.

கச்சேரி இருக்கு
தொடர்ந்து பேசும் அனிதா பேர் வைக்க வேண்டாம் என்றால் கான்செப்ட்டே கொண்டு வந்திருக்கக்கூடாது என்கிறார். கான்செப்ட் வேண்டாம் என்றால் ஏன் பேர் வைக்கிறீங்க என்றும் நிஷாடம் கேட்கிறார். புரமோவை பார்க்கும்போதே இன்றிரவு கச்சேரி இருக்கு என்பது தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











