பிறந்து 60 நாளிலேயே விபத்தில் என் குழந்தையின் காது பிஞ்சுடுச்சு.. மூளையில் ரத்தக்கசிவு.. கதறிய நிஷா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்க வைத்து வந்த அறந்தாங்கி நிஷா முதல் முறையாக தனது குழந்தைக்காக பிக்பாஸ் வீட்டில் கதறி அழுதது பார்வையாளர்களை கலங்க வைத்தது.

Recommended Video

கண்ணீர்விட்ட Anitha Sampath | Emotional moment | Promo 1

பிக்பாஸின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொள்ளுமாறு கூறினார் பிக்பாஸ்.

இதன் அடிப்படையிலேயே தகுதியில்லாத 8 பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார் பிக்பாஸ்.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

அதனை தொடர்ந்து தங்களின் அனுபவங்களை நேற்று வேல்முருகன், சனம் ஷெட்டி மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். அப்போது ரொம்பவே கலகலப்பாக தனது கதையை சொல்ல ஆரம்பித்தார் அறந்தாங்கி நிஷா.

பின்னால் நிற்க வைப்பார்கள்

பின்னால் நிற்க வைப்பார்கள்

தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடந்த சம்பவங்களையும் தான் சந்தித்த அவமானங்களையும் பகிர்ந்து கொண்டார் நிஷா. பள்ளியில் பிரயரில் நிற்கும் போது கூட தன்னை பின்னாடி நிற்க வைப்பார்கள் என்றும், பின்னர்தான் தெரிந்தது, அழகாய் இருப்பவர்களைதான் முன்னால் நிற்க வைப்பார்கள் என்று.

மாப்பிள்ளைகள் மறுப்பு

மாப்பிள்ளைகள் மறுப்பு

கல்லூரி நாட்களில் கூட எனக்கு யாரும் லவ் லெட்டர் கொடுத்ததில்லை. என்னை ஒரு கொரியராக கூட பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைகள் மூன்று பேர் கூட பொண்ணு கறுப்பா இருக்கு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.

கார் விபத்து

கார் விபத்து

என் மாமாதான் நாம் கல்யாணம் செய்துக்கொள்ளலாம் என்றார். ஐ லவ் யூ லாம் சொல்லவில்லை. இருட்டுக்குள்ள ஒரு இருட்டுக்கு லவ் யூ சொன்னது என் புருஷன்தான். எனக்கு என் வேலை ரொம்ப பிடிக்கும். ஒரு முறை குழந்தையுடன் ஷுட்டிங்குக்காக சென்னை வந்து கொண்டிருந்தோம் செங்கல்பட்டில் கார் விபத்துக்குள்ளானது.

குழந்தையின் காது பிய்ந்தது

குழந்தையின் காது பிய்ந்தது

இதில் என் 60 நாள் குழந்தையின் காது பிய்ந்து கிழிந்துவிட்டது. நான் 2 நாட்கள் ஐசியுவில் இருந்தேன். என் குழந்தை 7 நாட்கள் ஐசியுவில் இருந்தது. காதை தைத்து விட்டார்கள். ஆனால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக ஏதேதோ கூறினார்கள். நான் என் குழந்தையிடம் விளையாடிவிட்டேன் என்று கூறி கதறி அழுதார்.

கதறிய நிஷா

கதறிய நிஷா

தன்னால், தான் வேலை மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய குழந்தை பாதிக்கப்பட்டது என்று கூறி கண்ணீர் விட்டார். இந்த விஷயத்தை சொந்தக்காரர்களுக்கு கூட சொல்லவில்லை என்று கூறி கண்ணீர்விட்டார். பேசி முடித்து விட்டு அமர்ந்த பிறகும் அழுதுக்கொண்டிருந்தார்.

கலங்க வைத்தது

கலங்க வைத்தது

ரியோவை கட்டியணைத்து சத்தமாக கதறினார் நிஷா. இதனைதொடர்ந்து அவரை ரேகா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலரும் ஆசுவாசப்படுத்தினர். எல்லோரையும் சிரிக்க வைத்த நிஷா கதறி அழுதது ஹவுஸ்மேட்ஸ்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கலங்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X