twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனியாக கொளுத்திப் போட்ட அர்ச்சனா.. நிஷா நேரடியாவே ஆரியிடம் ‘அதை’ கேட்டுவிட்டார்!

    |

    சென்னை: நிஷாவை ஆரி கலாய்த்ததை வைத்து தனியாக கொளுத்திப் போட நினைத்த அர்ச்சனா அக்காவுக்கு செம பல்பு கிடைத்தது.

    நேரடியாக ஆரியுடன் மோதாமல், நிஷாவின் பிரச்சனையை கிளப்பி ரியோவுக்கு கொம்பு சீவி விட பார்த்த அர்ச்சனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    நிஷாவே தனது பிரச்சனை பற்றி நேரடியாக ஆரியிடம் பேசி தெளிவுப்படுத்திக் கொண்டது பாராட்டுக்குரியது.

    இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா? டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்!இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து யாரு வெளியே போறா? டேஞ்சர் ஸோனில் இவங்க தான் இருக்காங்களாம்!

    ஆரி தான் குறி

    ஆரி தான் குறி

    காலர் டாஸ்க்கில் நல்லா பர்ஃபார்ம் பண்ண வரிசையில் ஆரிக்கு முதல் இடம் கிடைத்தது, அர்ச்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரி நிஷாவை கலாய்த்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பட்டும் படாமல் ஆரி அண்ணா, ஆரி அண்ணா என பேசி ரியோவுக்கு அர்ச்சனா தீ மூட்ட பார்த்தார்.

    சுத்த நடிப்பு

    சுத்த நடிப்பு

    அன்பு வைத்து விளையாடுகிறேன். வீட்டுக்குப் போகணும்னு ஆசை என அர்ச்சனா, நல்லாவே பிக்பாஸ் வீட்டில் நடித்து வருகிறார். இப்போ, முதல் இடத்துக்கு ஆரி முன்னேறி செல்வது பிடிக்காமல் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களையும் ஆரிக்கு எதிராக திரட்டும் வேலையை இன்னொரு டீம் இருக்கு பாலா அது உன் கண்ணுக்கு தெரியல என ஆரியும், சனமும் டீம் என முடிச்சு போட பார்க்கிறார்.

    நிஷாவுக்கும் ஆரிக்கும் என்ன பிரச்சனை

    நிஷாவுக்கும் ஆரிக்கும் என்ன பிரச்சனை

    அர்ச்சனா அப்படி ரியோவையும், ஜித்தன் ரமேஷையும் தனியாக அழைத்து வைத்துக் கொண்டு பேசும் அளவுக்கு ஆரிக்கும் நிஷாவுக்கும் என்ன பிரச்சனை என்று பார்த்தால், நீங்க செய்யும் காமெடி நல்லா இல்லை என ஆரி விளையாட்டா சொன்னதை வச்சுத் தான் அர்ச்சனா விளையாட பார்க்கிறார் என்பது தெரிகிறது.

    பெயர் கெட்டு விடும்

    பெயர் கெட்டு விடும்

    நிஷாவின் காமெடி நல்லா இல்லை என தொடர்ந்து சொல்லி நிஷாவை மொக்கை காமெடியன் என வெளியே பிராண்டிங் பண்றாரு, இதனால், அவருக்கு ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்கிற ரேஞ்சுக்கு எல்லாம் அர்ச்சனா பேசுவது தான் பெரிய காமெடியாக தெரிகிறது.

    ரியோ ரொம்ப உஷார்

    ரியோ ரொம்ப உஷார்

    பாட்டி சொல்லைத் தட்டாதே டாஸ்க்கில் பாலாவை அடிக்கணும், பேன்ட் கழட்டணும் என ரியோவையும் சோமசேகரையும் அர்ச்சனா தூண்டி விட்ட போதே, தெளிவா இருந்த ரியோ, இப்போ அர்ச்சனா தனியா கூப்பிட்டு கொளுத்திப் போடும் போதும், அதை நான் நிஷா கிட்டயே சொல்லிட்டேன். இது உன் பிரச்சனை நீதான் பேசணும் என அர்ச்சனாவுக்கு சரியான நோஸ் கட் கொடுத்தார்.

    நேரடியாக கேட்ட நிஷா

    நேரடியாக கேட்ட நிஷா

    ரியோ சொன்னது போலவே, ஆரியிடம் நிஷா நேரடியாகவே நீங்க காமெடியா சொன்னீங்களா? இல்லை சீரியஸா சொன்னீங்களா? என் காமெடி நல்லா இல்லைன்னு என கேட்டதும், என் டோன் வேணா வேற மாதிரி தெரிஞ்சிருக்கலாம். ஆனால், நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னேன். ஆனால், அது இப்படி விபரீதமாக ஆகும் என நினைக்கல என்று நிஷாவை தெளிவுப்படுத்தி அர்ச்சனாவின் பஞ்சாயத்துக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்.

    English summary
    Archana talks about Nisha and Aari issue. Rio Raj clearly told, Nisha will handle her issue and also Nisha directly asked Aari and sort out the problem.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X