அனிதாவிடம் ‘அதை’ பற்றி கேட்ட நிஷா.. என் அப்பாவா பார்க்கிறேன் என ரியோவையும் கலங்க வச்சிட்டாங்க!
சென்னை: அனிதா சம்பத்துக்கு கால் பண்ணி பேசிய நிஷா கேட்ட கேள்வி, அனிதா சம்பத்தை அப்படியே ஆஃப் செய்து விட்டது.
Recommended Video
மேலும், ரியோ பற்றி நிஷா பேசிய வார்த்தைகள் ரியோவை மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களையும் கலங்க வைத்து விட்டது.
ஹர்ட்டே பண்ணாமல் வழக்கம் போல ஜாலியா ஒரு போன் கான்வெர்சேஷன் நடந்தது சூப்பர்.

நல்ல மனசு
ரியோ பின்னாடியே ஒளிந்து கொண்டு நிஷா கேம் ஆடுகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அவரது நல்ல மனசு அடிக்கடி வெளிப்பட்டு மத்த போட்டியாளர்களை அப்படியே ஆஃப் செய்து வருவதை நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்த போட்டியாளர் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு மத்தவங்களா மாதிரி கோர்த்து விடாமல், அனிதாவிடம் அந்த விஷயத்தை நேரடியாக கேட்ட இடத்திலேயே நிஷா இந்த வாரம் சேவ் ஆயிட்டாங்க!

அம்மாவை விட சூப்பர்
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில், தன்னோட அம்மாவை விட சூப்பர் என்றும், கருப்பாக இருந்தாலும், தைரியமா சாதிக்க முடியும் என நிஷா அக்கா இருப்பது தனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு என்றும் அனிதா சம்பத் சொல்லி இருந்தார். ஆனால், இப்போ ஏன் என் கிட்ட பேசாமல் விலகிப் போயிட்ட என்கிற கேள்வியை நிஷா அனிதாவிடம் நறுக்கென கேட்டுவிட்டார்.

ஆஃப் ஆன அனிதா
நிஷா அந்த பாயின்ட்டை புடித்து கேட்டதும் அனிதா சம்பத்தால் மறுத்து ஏதும் பேச முடியவில்லை. ஆமாம், இப்பவும் நான் அதை மறக்கல, உங்க குரூப்ல சேர்ந்து இருந்தா நான் என்னோட கேம் ஆடாத மாதிரி ஃபீல் ஆகுதுன்னு அனிதா டோட்டலா ஆஃப் ஆகி விளக்கம் கொடுத்தார். அர்ச்சனா சொன்ன அன்பு இதுதானோ? நல்லா அன்பாலயே அடிக்கிறாங்களே!

அப்பா மாதிரி
ரியோவுக்கு பின்னால் தான் நின்று விளையாடவில்லை என்பதை மீண்டும் விளக்கிய நிஷா, காதலோடு ஒருத்தர் எனக்காக வருவார், அவர் ஏன் கணவர், அவரை இங்கே பார்க்க முடியாது. ஆனால், கண்களில் நம்பிக்கையோடு என்னை ஊக்கப்படுத்தும் என் அப்பா போல இங்க ஒருத்தன் இருக்கான் அவன் தான் என் தம்பி ரியோ என நிஷா சொன்ன இடத்தில் ரியோ அப்படியே கலங்கிப் போயிட்டார்.

நிஷாவை கட்டிப்பிடித்து
அனிதாவிடம் நல்லா விளையாடு, நானே நாமினேட் ஆகிக்கிறேன் என போனை கட் பண்ணினார் நிஷா. வெளியே வந்த அனிதா சம்பத், நிஷாவை அப்படியே கட்டிப் பிடித்து பழையபடி நெருங்கி பழக ஆரம்பித்தார். நிஷா பேசி முடித்து வெளியே வந்த பிறகு சோமசேகரும், ரியோவும் அவரை கலாய்த்து தள்ளியதை அன்சீனில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











