விட்டுகொடுக்க முடியாது.. விடாப்பிடியாக பேசிய நிஷா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்.. ட்ரெண்டாகும் #Nisha

சென்னை: பிக்பாஸ் புரமோவில் நாமினேஷன் டாப்புள் கார்டை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறிய நிஷாவை ட்ரெண்ட் செய்து திட்டி தீர்க்கின்றனர் நெட்டிசன்கள்.

பிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரிந்தது. இதில் 7 பேர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் எஸ்கேப் ஆக நாமினேஷன் டாப்புள் கார்டை கொடுத்துள்ளார்.

7 பேர் போட்டி

7 பேர் போட்டி

அந்த டாப்புள் கார்டை பெறும் போட்டியாளர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெறாத போட்டியாளர் ஒருவரை நாமினேட் செய்யலாம். இதற்காக நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள பாலாஜி, ஆரி, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், அனிதா, சனம் ஷெட்டி மற்றும் நிஷா ஆகியோர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

கழுவி ஊற்றி வருகின்றனர்

கழுவி ஊற்றி வருகின்றனர்

அப்போது பேசும் நிஷா, யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என கூறுகிறார். மேலும் ஆஜித்தை நாமினேட் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் நிஷாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிஸ்கட் கதை

பிஸ்கட் கதை

கமலிடம் பேசம் போது மட்டும் விட்டுக்கொடுப்பது, அன்பு செய்வது என நடித்து வருகிறார் என திட்டி தீர்த்துள்ளனர் நெட்டிசன்கள். நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் 50 நாட்கள் பங்களிப்பு குறித்து பேசிய நிஷா, எல்லாருக்கும் கொடுத்துவிட்டு சாப்பிடுவதில் தான் மகிழ்ச்சி என பிஸ்கட் கதையை என்றார்.

நெகட்டிவ் கமெண்ட்ஸ்

நெகட்டிவ் கமெண்ட்ஸ்

இந்நிலையில் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என தனது சுய ரூபத்தை காட்டியுள்ளார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள், #Nisha என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து விளாசி வருகின்றனார். முழுக்க முழுக்க நெகட்டிவ் கமெண்ட்டுகளால் #Nisha என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது.

கிளம்பிடுவீங்களே

கிளம்பிடுவீங்களே

நிஷா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனா சொல்லி கொடுத்த ஸ்க்ரிப்ட்ட கரெக்ட்டா சொல்றமா நிஷா.. நீங்க இல்லன்னா உடனே கிட்சன் டீம் இல்லன்னு கிளம்பிடுவீங்களே என கிண்டலடித்துள்ளார்.

அங்கே சொல்ல தைரியம் இருக்கா

அங்கே சொல்ல தைரியம் இருக்கா

புரமோ 2ல நான் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாதுன்னு நிஷா சொல்லுது. இதையே ரியோ, ரமேஷ், அர்ச்சனாவிடம் என சொல்ல அவருக்கு தைரியம் உள்ளதா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இந்திய அளவில் ட்ரெண்ட்

இந்திய அளவில் ட்ரெண்ட்

புரமோவில் பேசி நிஷா இந்திய அளவில் ட்ரென்ட் ஆவதை பார்த்த இந்த நெட்டிசன், புயலையும் தாண்டி நிஷா இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறார் என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X