பொல்லாங்கு படத்தில் அறிமுகமாகும் நிஷா லாவண்யா!
பிஆர் எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் முதல் படமான பொல்லாங்கு ஆடியோ வெளியீடு நேற்று சென்னை 4 பிரேம்ஸில் நடந்தது.
பாடல்களை நடிகர் கணேஷ் வெங்கட்ராம் வெளியிட, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பிஎல் தேனப்பன் பெற்றுக் கொண்டனர்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, காந்தி மார்க்ஸ் இயக்கும் இந்தப் படத்தின் கதை, கொடைக்கானலில் நிகழும் ஒரு த்ரில்லர்.
விண்மீன்கள் படத்துக்கு இசையமைத்த ஜுபின் இந்தப் படத்துக்கு இசை தந்துள்ளார்.
வினோத் குமார் - நிஷா லாவண்யா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர்.
அடர்ந்த காட்டிலும் பகல் இரவு பாராமல் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தந்ததாக ஹீரோயினை வெகுவாகப் பாராட்டினார் இயக்குநர்.
Comments


Click it and Unblock the Notifications