ஆரியிடமே எகிறிய நிஷா.. ரமேஷை பத்தி பேசுனா நிஷாவுக்கு ஏன் கோபம் வருது.. அதிரவைக்கும் 3வது புரமோ!
சென்னை: நிஷா இவ்ளோ நாள் சோலோவா விளையாடுலன்னு சொல்லிட்டு இருந்தாங்க, இப்போ சோலோவா ஆரியிடமே எகிறி சண்டை போடும் அதிரவைக்கும் 3வது புரமோ வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
Recommended Video
2010ல வந்த எந்திரன் படத்தை இப்போ தான் பிக் பாஸ் டீம் பார்த்துருப்பாங்க போல, ரோபோ vs மனிதர்கள் டாஸ்க்கை கொடுத்து மொக்கை போட ஆரம்பித்துள்ளனர்.
ரோபோவாக இருக்கும் ரமேஷை பத்தி பேசுனா நிஷாவுக்கு ஏன் கோபம் வருதுன்னு ஆரி நல்லாவே கேட்கிறார்.

எந்திரன் படம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து 2010ல வந்த எந்திரன் படத்தை இப்போ தான் பிக் பாஸ் டீம் பார்த்துருப்பாங்க போல, ரோபோ vs மனிதர்கள் டாஸ்க்கை கொடுத்து இந்த வாரத்தை ஓட்ட ஆரம்பித்துள்ளனர். முதல் புரமோவில் ரோபோ டாஸ்க் பற்றியும், இரண்டாவது டாஸ்க்கில் அர்ச்சனா அப்பாவை இழுத்தும் ரகளை ஆரம்பித்த நிலையில், மூன்றாவது புரமோவில் என்ன கச்சேரி என்பதை பார்ப்போம்.

நெருப்பு நிஷா
ரியோவுக்கும், அர்ச்சனாவுக்கும் அல்லக்கையாக நீர் நிஷாவாக இருந்த அறந்தாங்கி நிஷாவை, நெருப்பு நிஷாவா மாறுங்க என கமல் தூண்டிவிட இப்போ சோலோவா பற்றி எரிய ஆரம்பித்துள்ளார் நிஷா. வேற யார் கூட சண்டை போட்டாலும், ஹைலைட்டா தெரிய மாட்டோம்னு, ஆரி கூடவே சண்டை போட்டு புரமோவில் இடம் புடிச்சிட்டாங்க..

ரோபோ ரமேஷு
ஜித்தன் ரமேஷாக எந்தவொரு பிக் பாஸ் கேமரா கண்ணுக்கும் தெரியாமல், 65 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தப்பித்து வந்த ஜித்தன் ரமேஷை இப்போ ரோபோ ரமேஷாக மாற்றி, சைலன்ட் ஆக்கி உள்ளனர். சும்மா இருப்பது, வாய் திறக்காமல் இருப்பது எல்லாம் ரமேஷுக்கு கை வந்த கலை என்பதால், ஆரியும் நிஷாவும் போட்ட பிளானா? இது என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆரியை விளாசும் நிஷா
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி, காதல் கண்ணை மறைக்குதுன்னு பிக் பாஸ் வீட்டில் இன்னொரு பிக் பாஸாகவே தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் நேர்மையின் சின்னம் ஆரியை 3வது புரமோவில் வச்சு விளாசி உள்ளார் நிஷா. ராஜா வீட்டுக் கன்னுக்குட்டின்னு ரமேஷுக்கு நீங்க எப்படி பேர் வைக்கலாம், அவர் வேலை செய்யவில்லை என்பதை நீங்க பார்த்தீங்களா என நல்லாவே எகிறுகிறார்.

அங்க ஏன் வலிக்குது
ரோபாவாக இருக்கும் ரமேஷை கூப்பிட்டு வந்து எவ்ளோ நேரம் தான் வச்சி செய்வீங்க என பொங்கிய நிஷாவால் கடுப்பான ஆரி, ரமேஷிடம் உங்களை பத்தி பேசுனா, நிஷாவுக்கு ஏன் கோபம் வருது, இப்போயாவது, அது உன் வேலை இல்லை, எனக்காக பேச எனக்குத் தெரியும்னு சொல்லுங்க என ரமேஷை பல்பு வாங்க வைக்க ஆரி சூப்பரா முயற்சி செய்து வருகிறார். ஆனால், அதெல்லாம் ஜித்தனிடம் பலிக்கிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











