ரம்யா கிருஷ்ணனையே அதிர வைத்த பிக் பாஸ் நிஷா.. சந்திரமுகி கெட்டப்பில் வேற லெவல் பேயாட்டம்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தம்பி ரியோவுடனும் அக்கா அர்ச்சனாவுடனும் இருந்தே தனது தனித் திறமையை வெளிப்படுத்தாமல் நிஷா இருந்ததாக பிக் பாஸ் போட்டியாளர்களே குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

ஆனால், பிக் பாஸ் ஜோடிகளில் மேடையேறி குத்தாட்டம் போட்டு வேற லெவலில் மகிழ்வித்து வருகிறார் நம்ம அறந்தாங்கி நிஷா அக்கா.

அதிலும் நாளை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சந்திரமுகி கெட்டப்பில் அவர் போட்ட ஆட்டத்தை பார்த்து ரம்யா கிருஷ்ணனே ஆடிப் போய் விட்டார்.

பாசமலர்

பாசமலர்

பிக் பாஸ் வீட்டில் பாசமலராக இருந்து வந்தார் அறந்தாங்கி நிஷா. கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கிய நிஷா. குக் வித் கோமாளி முதல் சீசனை தொகுத்து வழங்கினார். அப்படியே அங்கிருந்து பிக் பாஸ் சீசன் 4க்கு ஷிஃப்ட் ஆன நிஷா அங்கே ரியோ மற்றும் அர்ச்சனாவின் நிழலிலேயே பல நாட்களை ஓட்டிவிட்டார்.

பேச்சுத் திறமை

பேச்சுத் திறமை

தமிழை அழகாக உச்சரிக்கவும் பேசவும் தெரிந்த அறந்தாங்கி நிஷா ஸ்டாண்ட் அப் காமெடியில் கலக்கி விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாகவே மாறிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் டாஸ்க், பட்டிமன்றம் டாஸ்க்கில் எல்லாம் புகுந்து விளையாடினார் நிஷா.

சாரிப்பா

சாரிப்பா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அப்பா குறித்து ரோபோ டாஸ்க்கில் பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார் நிஷா. அதுவரை ஒற்றுமையாக இருந்த அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் பெரிய சண்டையே வெடித்தது. பின்னர், சாரிப்பா என நிஷா வானத்தை பார்த்து கத்திய காட்சிகளை ரசிகர்கள் பெருமளவில் ட்ரோல் செய்தனர்.

சந்திரமுகியாக

சந்திரமுகியாக

பிக் பாஸ் சீசன் 4ஐ ஓட்ட வைத்த காடா அல்லது நாடா டாஸ்க்கை பிக் பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சிக்கும் கொண்டு வந்துள்ளனர். அதில், சந்திரமுகி பேய் கெட்டப்பை போட்டு பேயாட்டம் ஆடியுள்ள நிஷாவின் லேட்டஸ்ட் புரமோ விஜய் டிவியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பேயாட்டம்

பேயாட்டம்

அறந்தாங்கி நிஷாவா இப்படி அரங்கையே அதிர வைத்து ஆடுவது என ரசிகர்கள் வாய் பிளந்து பார்க்கும் அளவுக்கு அப்படியொரு பேயாட்டத்தை ஆடியுள்ளார். அடுத்ததாக சூப்பர் சிங்கர் சீசனில் கலந்து கொள்ளப் போவதாகவும் அவர் பண்ணும் காமெடி அட்டகாசம்.

ஆடிப்போன ராஜமாதா

ஆடிப்போன ராஜமாதா

வனிதா விஜயகுமாரின் காளியாட்டத்தை பார்த்து காண்டான ரம்யா கிருஷ்ணன், அவருக்கு கம்மியான மார்க் போட்டு அசிங்கப்படுத்தியதால் நிகழ்ச்சியை விட்டே அவர் வெளியேறி விட்டார். ஆனால், நிஷாவின் இந்த சந்திரமுகி டான்ஸை பார்த்து "என்ன அப்படி ஆடுறீங்க.. இங்க அதிருது" என ரம்யா கிருஷ்ணன் கொடுத்துள்ள கமெண்ட்டும் நிஷா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. நாளைக்கு நிகழ்ச்சியில் முழுசா சந்திரமுகியா மாறிய நிஷாவை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X