'நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்' நிஷாவால் கொதித்துப்போன வேல்முருகன்.. நாரதர் வேலை பார்த்த பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில் வேல்முருகன் ரொம்பவே ஆவேசப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது. இந்த புரமோ இரண்டாவது புரமோவின் தொடர்ச்சியாக உள்ளது.
இந்த புரமோவில் சொல்றீயா செய்றீயா டாஸ்க் விளையாடப்படுகிறது. இதில் நிஷா பங்கேற்கிறார்.

நிஷாவுக்கு டாஸ்க்
நிஷாவிடம், பாலாஜி முருகதாஸ் 2 பேருக்கு நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் பட்டம் கொடுங்கள் என கேட்கிறார். அதற்கு 3 பேரின் பெயர்களை சொல், நான் பட்டம் கொடுக்கிறேன் என்றார் நிஷா.

சிம்பிளி வேஸ்ட் வேல்முருகன்
அதற்கு ஏன் பயமா இருக்கா உங்களுக்கு என பாலாஜி முருகதாஸ் கேட்க, நான் ஏன் பயப்பட போகிறேன் என்று சொல்லும் நிஷா, நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் வேல்முருகன் என்கிறார் நிஷா.

ஆவேசமான வேல்முருகன்
இதனால் கடுப்பான வேல் முருகன், என்ன சும்மா அமைதியா இருந்தா நான் கெட்டவனா? இது நியாயமே இல்ல, யார்க்கிட்ட வம்பு வளர்த்திருக்கேன்? யார்க்கிட்ட பிரச்சனை பண்ணியிருக்கேன்? அப்படி எதுவுமே இல்லாம எப்படி என்ன சொல்ல முடியும் என ஆவேசமாய் கத்துகிறார்.

பற்ற வைத்த பாலாஜி
அதனை பார்த்த அர்ச்சனா, 10 நிமிஷம் இரு வேலு என அவரை ஆசுவாசப்படுத்துகிறார். நிஷாவுக்கு ஒரு டாஸ்க்கை கொடுத்து கொளுத்திப் போட்ட பாலாஜி, இந்த கூத்துக்களையெல்லாம் பார்த்து நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

உங்களுக்கு தேவைதான்
தொடர்ந்து ரம்யாவிடம் யாரையாவது நாமினேட் பண்ணுங்க என்கிறார் பாலாஜி, ராம்யாவும் வேல்முருகனின் பெயரை சொல்ல அமைதியாக தலையை குனிந்தப்படி உள்ளார் வேல்முருகன். இதனை பார்த்த நெட்டிசன்கள், சுரேஷிடம் என்ன ஏத்தம் போட்டீர்கள் உங்களுக்கு இது தேவைதான் என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











