அர்ச்சனாவை இப்படி பங்கமா கலாய்க்கிறாங்களே நிஷா.. டெரர் பீஸை இப்படி காமெடி பீஸா ஆக்கிட்டீங்களே!

சென்னை: போட்டியாளர்களை கலாய்ப்பதிலும், கழுவி ஊற்றுவதிலும் எந்த ஒரு அஃபென்ஸும் இல்லாமல் அழகா ரசிக்கும்படி பண்ணி வருகிறார் நிஷா.

அர்ச்சனாவுக்கு இவ்ளோ பெரிய மகளாக நடிக்கும் நிஷா, அவரை போற்றி புகழ்வது போல, அவரை பங்கமாக கலாய்த்து தள்ளிய காட்சிகள் பிக் பாஸ் ரசிகர்களுக்கு காமெடி விருந்து என்றே சொல்லலாம்.

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மம்மி, நீங்க ரொம்ப க்யூட் என அத்தனையும் ஜோக்கா சொல்லி அர்ச்சனாவை அதிர வைத்தார்.

அர்ச்சனாவுக்கு பொண்ணு

அர்ச்சனாவுக்கு பொண்ணு

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரம்பமாகி உள்ள பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் அர்ச்சனாவை பாட்டியாக்கிய பிக் பாஸ், அவருக்கு மகன், மகள், பேரன், பேத்தி என ஏகப்பட்ட பணத்துக்கு ஆசைப்படும் சொந்தங்களை உருவாக்கி வைத்தார். அர்ச்சனாவுக்கு மகளாக நிஷாவும், மருமகனாக ரியோவும் நடித்து வருகின்றனர்.

நிஷா கிண்டல்

நிஷா கிண்டல்

பாட்டியாக மாறியுள்ள அர்ச்சனாவை பாராட்டுகிறேன் என்கிற பெயரில், நீங்க ரொம்ப அழகு, நீங்க ரொம்ப க்யூட், இந்த உலகத்திலேயே நீங்க தான் அழகு, அழகே பொறாமைப்படும் பேரழகு என எல்லாமே ஜோக் என சொல்லி செமயா ட்ரோல் பண்ணார் நிஷா. ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

சொத்து கிடையாது

சொத்து கிடையாது

அர்ச்சனாவை நிஷா ட்ரோல் பண்ண நிலையில், சொத்து பிரித்துக் கொடுப்பதில், நான்கு குடும்பத்தின் பெயர்களை எழுதினேன்ல அதில், நிஷாவின் பெயரை அழிச்சிடுங்க மாப்பிள்ளை என சொல்லி நிஷாவை அலறவிட்டார் அர்ச்சனா. என்ன நடக்குதுன்னே புரியான அனிதா, உங்களை நல்லாதானே சொல்றாங்க என நிஷாவுக்கு சப்போர்ட் பண்ணினார்.

காமெடி பீஸ்

காமெடி பீஸ்

உடனே அர்ச்சனா, அவ ஜோக்குன்னு சொல்லிட்டு இதெல்லாம் சொல்லிட்டு இருக்கா என்றதும், நம்ம அர்ச்சனா மம்மி இந்த உலகத்துக்கே நகைச்சுவை விருந்து என சொல்ல வந்தேன் என நிஷா சொன்னதும், உங்களை காமெடி பீஸுன்னு சொல்றாங்க என அனிதா, நிஷா பற்றி நல்லா கொளுத்திப் போட்டார். மேலும், பாட்டுப் பாடியும் நிஷா அர்ச்சனாவை நல்லாவே ஓட்டி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X