இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது யாரு தெரியுமா? அர்ச்சனாவின் கணிப்பு இவர்தான்!
சென்னை: வார கடைசி ஆனாலே பிக் பாஸ் வீட்டில் யாராவது ஜோசியராகி, அந்த வாரம் யார் வெளியேறுவார் என்று சொல்லிவிடுவார்கள்.
Recommended Video

இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனாவின் கணிப்புப்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது நிஷா தான்.

யார் யார்
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருந்து அனிதா தலைவர் ஆனதால் தப்பித்து விட்டார். கேபி, சோமசேகர், ஜித்தன் ரமேஷ், ரம்யா, ஷிவானி மற்றும் நிஷா ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டபுள் எவிக்ஷன்
வாரம் வாரம் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமா? அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் வருமா? என ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கும் அளவுக்கு ஏகப்பட்ட மிக்சர் தின்னிகள் உள்ளே போட்டியாளர்களாக உள்ளனர். ஆனால், இந்த வாரம் கண்டிப்பாக டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றே நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அப்படி நடந்தால், நிஷா மற்றும் ரமேஷ் வெளியேறுவார்கள் என்றே தெரிகிறது.

டேஞ்சர் ஸோன்
கேபி, ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகிய மூவர் தான் இந்த வாரம் டேஞ்சர் ஸோனில் உள்ளனர் என்கிற தகவலும் கசிந்துள்ளன. வழக்கம் போல சோமசேகர், ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானிக்கு ரசிகர்களின் ஓட்டுக்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. மேலும் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் இருந்து தான் இந்த வாரம் ஒருவர் வெளியேறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ச்சனாவின் ஆருடம்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட எபிசோடில், அர்ச்சனா அக்கா ரியோவிடம் ரொம்பவே பயந்து போய் ஒரு விஷயத்தை சொன்னார். அது என்ன வென்றால், தனக்கு என்னவோ இந்த வாரம் நிஷா போயிடுவாளோ என்கிற பயம் ஏற்பட்டுள்ளதாக ஆருடம் பார்த்துள்ளார். ரம்யா அடுத்த வாரம் கேப்டன் என்பதால், அவர் வெளியேற வாய்ப்புகள் கம்மி.

கேபி வெளியேறுவாரா?
ஒருவேளை விஜய் டிவியின் சப்போர்ட் காரணமாக இந்த வாரமும் நிஷா சேவ் ஆனால், கேபி தான் வெளியேறுவார் என்றும் சில ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த லிஸ்டில் இருக்கும் 6 பேரில் 4 பேர் வெளியேற வேண்டியவர்கள் தான் என்றும், கூண்டோட கைலாசம் என கமல் போன வாரம் சொன்னது போல இந்த வாரம் செய்தால் நல்லா இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











