கூடவே இருந்து நிஷா முதுகில் குத்திய ரியோ.. இருவருக்குமிடையே நடந்த வழக்கில் ஜெயித்தது யார் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் கோர்ட் சீனையும் ஜட்ஜ் சுசித்ராவையும் எந்த அளவுக்கு கழுவி ஊற்ற முடியுமோ அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்களே மரண சம்பவம் செய்து விட்டனர்.
இந்நிலையில், அடுத்த எபிசோடிலும் பிக் பாஸ் கோர்ட் சீன் தொடர்ந்ததை பார்த்ததும் குபீரென சிரித்து விட்ட ரசிகர்கள், யாருக்கும் யாருக்கும் வழக்கு என்பதை அறிந்து கொண்டு மேலும் கலாய்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

கன்டென்ட் இல்லை
பிக் பாஸ் வீட்டின் 32வது நாள் மற்றும் 33வது பிக் பாஸ் எபிசோடு கன்டென்ட்டே இல்லாமல், ஆரம்பம் முதலே சிக்கி சின்னாபின்னாமானது கண்கூடாக தெரிந்தது. மறுபடியும் கோர்ட் சீனையும் ரேடியோ ஸ்டேஷனையும் வச்சு ஓட்டி ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்து விட்டனர்.

செம போரிங் மோட்
இந்த வாரம் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டைகள் எல்லை மீறிப் போய் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை கிளப்பி உள்ளதால், இன்றைய நிகழ்ச்சியை ஹேப்பி மூடில் கொண்டு செல்ல நினைத்து விட்டார்களோ? என்னவோ தெரியவில்லை. ஆனால், மொத்தமும் செம போரிங் மோட் தான் என்று சொல்ல வேண்டும்.

நிஷா முதுகில் குத்திய ரியோ
தம்பி, தம்பின்னு எவ்ளோ பாசமாக ரியோவை நிஷா அக்கா பார்த்துட்டு இருக்காங்க, அவங்க பாசத்து மேலயே இப்படி புகார் கொடுத்தா என்னப்பா ரியோ என ரசிகர்கள் ரியோ பக்கம் திரும்பி விளாசித் தள்ள ஆரம்பித்தனர். சுவாரஸ்யமே இல்லாத வழக்கை ரொம்ப லாங்கா போக வேண்டாம் என பார்த்த ஜட்ஜம்மா நிஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பை சொல்லி விட்டார்.

தாத்தா மாதிரி பண்ணல
சுரேஷ் சக்கரவர்த்தி மீது கேபியும் இதே போன்ற பாசமான ஒரு வழக்கை தான் தொடர்ந்திருந்தார். ஆனால், நம்ம ஓவர் ரியாக்டிங் தாத்தா அதனை பெரிய சண்டை ஆக்கி நல்லாவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்தார். ஆனால், நம்ம ரியோ கட்டிப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பது போல, நிஷாவை போய் கட்டிப் பிடித்து வழக்கில் வென்றதாக மனதார பாராட்டினார்.

ஓவர் இரிடேட்டிங்
இது ஒரு வழக்கு இதுக்கு ஒரு விசாரணையா என ரசிகர்கள் நினைத்து சிரித்துக் கொண்டிருக்க, நிஷா அக்காவே தனக்கான வக்கீலாக சிறப்பாக வாதாட வாதாட ரியோ உள்ளிட்ட அனைவரும் கை தட்டி அவருக்கு வெற்றியை கொடுத்து விட்டனர். அதன் பின்னரும், ரியோவுக்கு வக்கீலாக வாதாடிய ஆரி, நிஷாவின் வக்கீலான ரம்யாவிடம் தேவையில்லாமல் மோதிய காட்சிகள் ஓவர் இரிடேட்டிங்,.

ஏமாத்திட்டாங்க பிக் பாஸ்
நடிகர் ரியோ ராஜ், தனது பாசமான அக்கா நிஷா மீது வழக்கு தொடர்ந்து, அவங்களை ஜெயிக்க வச்சி, என்னையே ஏமாத்திட்டாங்க பிக் பாஸ் என கை தூக்க சொல்லி தீர்ப்பு சொல்லும் உலக மகா நீதிபதி சுசித்ரா புலம்பியது தான் அந்த சீனிலேயே சிரிப்பை வர வழைத்தது. மறுபடியும் சொல்றோம் ரசிகர்களை சோதிக்காதீங்க பிக் பாஸ்.


Click it and Unblock the Notifications











