'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை அடுத்து.. இந்த ஹீரோயின் படமும் OTT-யில் ரிலீஸ் ஆகுதாமே!
சென்னை: பொன்மகள் வந்தாள், பெண்குயின் படங்களுக்குப் பிறகு அந்த ஹீரோயின் படமும் ஓடிடி-யில் வெளியாவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Recommended Video
மாதவன் ஹீரோவாக நடித்துள்ள அந்தப் படம், நிசப்தம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது.
அனுஷ்கா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு தமிழில், சைலன்ஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

ஷாலினி பாண்டே
முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இதில், மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். இதில் அனுஷ்காவின் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தள்ளி வைப்பு
இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்து பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. அந்த தேதியிலும் ரிலீஸ் ஆகவில்லை. பின் ஏப்ரலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

பொன்மகள் வந்தாள்
லாக்டவுன் காரணமாக இப்போது அதுவும் முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் ஓடிடி-யில் படங்களை நேரடியாக வெளியிட சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தமிழில், ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், இந்தப் படம் வரும் 29 ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது. இதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படமும் அமேசானில் நேரடியாக வெளியாகிறது. இந்தப் படம் ஜூன் 19 ஆம் தேதி வெளியாகிறது. இதை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் ஸ்டோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பேச்சுவார்த்தை
இதையடுத்து அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மைதான் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஐந்து மொழிக்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள் அதிக தொகை கேட்பதாகவும் அதனால் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications











