கல்லீரல் பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

By

ஐதராபாத்: கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பிரபல இயக்குனர் மரணமடைந்தார்.

தமிழில் மாதவன், சங்கீதா, சீமான், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த படம், எவனோ ஒருவன். இதை இயக்கியவர், இந்திப் பட இயக்குனர் நிஷிகாந்த் காமத்.

இந்தப் படம், டோம்பிவிலி பாஸ்ட் என்ற மராத்தி படத்தின் ரீமேக். இந்த மராத்தி படத்தை இயக்கியவரும் நிஷிகாந்த் தான்.

ராக்கி ஹேண்ட்சம்

ராக்கி ஹேண்ட்சம்

பின்னர், மாதவன், சோஹா அலிகான், இர்பான் கான் நடித்த, மும்பை மேரிஜான், ஜான் ஆபிரகாம் நடித்த 'காக்க காக்க' ரீமேக்கான ஃபோர்ஸ், அஜய்தேவ்கன், தபு, ஸ்ரேயா நடிப்பில் த்ரிஷ்யம் ரீமேக், ஜான் ஆபிரகாம் நடித்த ராக்கி ஹேண்ட்சம் உள்பட பல படங்களை இயக்கினார். ராக்கி ஹேண்ட்சம் உட்பட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்தப் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

உடல் நிலை பாதிப்பு

உடல் நிலை பாதிப்பு

லாய் பாரி, சாட்ச்யா ஆத் காரத் உள்பட சில மராத்தி படங்களையும் இயக்கியுள்ள நிஷிகாந்துக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதி, திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஐதராபாத் கச்சிபவுலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மஞ்சள் காமாலை நோய் இருப்பதை அறிந்தனர். அவர் வயிற்றிலும் பிரச்னை இருப்பது தெரியவந்தது.

தீவிரச் சிகிச்சை

தீவிரச் சிகிச்சை

அவரது கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல் நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதையடுத்து ரசிகர்களும் திரையுலகினரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வந்தனர்.

மரணம் அடைந்தார்

மரணம் அடைந்தார்

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று மாலை மரணமடைந்தார். மாலை 4.24 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நிஷிகாந்தின் மரணத்திற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சோகங்களை சந்தித்து வரும் பாலிவுட்டுக்கு நிஷிகாந்தின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X