நடிகை ஆகவில்லை என்றால்..இந்த தொழில் தான் செய்திருப்பேன்..மனம் திறந்த நிதி அகர்வால்!
சென்னை : நான் நடிகையாகவில்லை என்றால், நிச்சயம் இந்த தொழில்தான் செய்திருப்பேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார்.
முன்னா மைக்கேல் எனும் ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்தவர் நிதி அகர்வால்.
அதன் பின்னர் தெலுங்கில் சவ்ய சாச்சி படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இதையடுத்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார்.

ஈஸ்வரன் படத்தில்
சிம்பு கதாநாயகனாக நடித்த ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்த நிதி அகர்வால், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி என சொல்லப்பட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் தந்துனானே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.

காதல் கிசுகிசு
இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் காதல் வயப்பட்டதாகவும், இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இவர்களுக்கு திருமணம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டன. சிம்புவின் மிகப்பெரிய மாற்றத்திற்கு இவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த கிசுகிசு குறித்து இதுவரை இருவரும் வாய் திறக்கவில்லை.

கழகத்தலைவன்
நிதி அகர்வால்,தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகஉ உள்ள கழகத்தலைவன்படத்தி உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இதனைத்தொடர்ந்து தெலுங்கில், ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகையாகவில்லை என்றால்,
அதில், உடற்பயிற்சி செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும், அதேபோல, யோகா செய்வது பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஒரு ரசிகர் நீங்கள் நடிகை ஆகவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அகர்வால், நான் நடிகையாகவில்லை என்றால், பேஷன் டிசைனிங் படித்துவிட்டு பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன், என்னுடைய குடும்பத்தினர் பிஸ்னஸ் செய்து வருவதால், நானும் நிச்சயம் வீட்டில் இருந்து இருக்க மாட்டேன் கண்டிப்பாக என்னுடைய தொழிலை செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











