ஸ்ருதி ஹாஸனை வெட்கத்தால் முகம் சிவக்க வைத்த தெலுங்கு நடிகர் நிதின்
சென்னை: பூஜை இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு நடிகர் நிதின் ஸ்ருதி ஹாஸனை வெட்கத்தால் முகம் சிவக்க வைத்துவிட்டார்.
பாலிவுட், டோலிவுட்டில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாஸன் 3 படத்திற்கு பிறகு தமிழில் நடித்துள்ள படம் பூஜை. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ருதி விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

நிதின்
பூஜை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு நடிகர் நிதின் கலந்து கொண்டார்.

கிரஷ்
பொதுவாக எதையும் பட்டும் படாமலும் பேசும் நிதின் இந்த விழாவில் ஸ்ருதி ஹாஸன் மீது தனக்கு பெரிய கிரஷ் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் ஒரு நல்ல நடிகைக்கான அனைத்து தகுதியும் ஸ்ருதிக்கு இருப்பதாக அவர் கூறினார்.

ஸ்ருதி
ஏராளமான ரசிகைகள் உள்ள நிதின் இவ்வாறு கூறியவுடன் ஸ்ருதி வெட்கத்தில் முகம் சிவந்தார்.

சந்தீப்
தெலுங்கு நடிகர்கள் சந்தீப் கிஷண் மற்றும் நவீன் சந்திரா ஆகியோரும் ஸ்ருதியை புகழ்ந்து பேசினார்கள்.

டோலிவுட்
டோலிவுட்டில் ஸ்ருதி ஹாஸனுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவரை ஒரு பாடலுக்கு ஆட வைக்க கூட கொட்டிக் கொடுக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











