Just In
- 49 min ago
கொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்
- 1 hr ago
தாமதமாகும் அண்ணாத்த சூட்டிங்…சூர்யா படத்தின் பணியை தொடங்கினார் சிவா!
- 1 hr ago
ரியல் லைஃப் ஹீரோ.. ஆரிக்கு சல்யூட் அடிக்கும் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் போட்டோ!
- 1 hr ago
நரைத்த தாடியில் சசிகுமார் அசத்தலான லுக்... தெறிக்குது சோசியல் மீடியா!
Don't Miss!
- News
டிரம்ப் விமானம் ஒதுக்காததன் எதிரொலி... பதவியேற்க வாடகை விமானத்தில் வந்த ஜோ பிடன்..!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Automobiles
அதிரடி காட்டும் கோமகி! ஒரே நேரத்தில் 3மின்சார டூ-வீலர்கள் இந்தியாவில் அறிமுகம்! இவற்றின் விலை எவ்ளோ தெரியுமா?
- Sports
வில்லியம்சன், வார்னர் இருக்காருங்கோ... நடராஜன், சாஹாவும் இருக்காங்க... சிறப்பான எஸ்ஆர்எச்!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
துபாயில் ஷூட்டிங்.. ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் குட்டித்தூக்கம்.. ஹீரோ எடுத்த செல்ஃபி!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தூங்கும் போது பிரபல ஹீரோ எடுத்த செல்ஃபி போட்டோ வேகமாக பரவி வருகிறது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில்,. விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் உட்பட பிரபல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

வரவேற்பு அதிகரிப்பு
நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருது வாங்கிய பிறகு அவருக்கு தென்னிந்திய மொழிகளில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இருந்தாலும் தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லை. ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன், சாணி காயிதம் ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

தெலுங்கு ரங்க் தே
தெலுங்கு படங்களில் அவர் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். அங்கு அவர் நடித்த மிஸ் இந்தியா படம், ஒடிடி தளத்தில் வெளியானது. இதற்கிடையில் நிதின் நடிக்கும் ரங் தே என்ற தெலுங்கு படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். கொரோனாவுக்குப் பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

செல்லத் தூக்கம்
இதன் பாடல் காட்சி ஷூட்டிங், இப்போது துபாயில் நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கு இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்து செல்லத் தூக்கம் போட்டார்.

கீர்த்தி ரிலாக்ஸ்
அதைக் கவனித்த படத்தின் ஹீரோ நிதின், இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் அவர் அருகே சென்று அதை செல்ஃபி எடுத்தனர். பின்னர் தனது சோசியல் மீடியா பக்கத்தில், நடிகர் நிதின் அதை வெளியிட்டுள்ளார். 'நாங்கள் வியர்வையில் நனைந்து கொண்டிருக்கும்போது, ஷாட்டுக்கு இடையில் கீர்த்தி சுரேஷ் ரிலாக்ஸ் செய்கிறார் என்று கூறியுள்ளார். இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது.