பிட்டு சீன்.. உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்னியா.. கீது மோகன் தாஸை விளாசிய இயக்குநர்!

பெங்களூர்: கேஜிஎஃப் ஹீரோ யஷ் பிறந்தநாள் இன்று அமோகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டாக்ஸிக் படத்தில் இருந்து அவரது அறிமுக டீசர் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பப்பில் யஷ் வரும் காட்சி வெளியான போதே காண்டம் விளம்பரமா? என ட்ரோல்கள் குவிந்த நிலையில், தற்போது காருக்குள் யஷ் ஃபாரின் கேர்ள் உடன் உடலுறவில் ஈடுபடும் காட்சி வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் கீது மோகன்தாஸ். அந்த படத்தில் கமல்ஹாசனும் கேமியோ ரோலில் நடித்திருப்பார்.

Nithin Renji Panicker Slams Toxic Birthday Peek Accuses Geetu Mohandas of Normalising Misogyny
Photo Credit:

யஷ் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்றதுமே ஏகப்பட்ட சர்ச்சைகள், ட்ரோல்கள் கிளம்பின. ஆனால், இன்று வெளியான டீசரை பார்த்ததுமே என்னடா இது ஹாலிவுட் லெவலில் இருக்கிறதே என பலரும் வாய் பிளந்த நிலையில், அந்த டீசரில் இடம்பெற்ற ஆபாசக் காட்சிகள் சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளன.

கசாபா படத்தை விளாசிய கீது மோகன்தாஸ்: மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியான கசாபா படத்தை இயக்கிய இயக்குநர் நிதின் ரெஜி பனிக்கர் சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்த நிலையில், இன்று தனது வன்மத்தை கொட்டிவிட்டார். கசாபா படம் வெளியான சமயத்தில் அந்த படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்துள்ளனர் என்றும் பெண் வெறுப்பு படமாக உள்ளது என்றும் கீது மோகன்தாஸ் 2016ல் படத்தின் இயக்குநரை விளாசி இருந்தார்.

Nithin Renji Panicker Slams Toxic Birthday Peek Accuses Geetu Mohandas of Normalising Misogyny

நீ இப்போ என்ன எடுத்து வச்சிருக்க: யஷ்ஷின் 39வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்ஸிக் படத்தின் அறிமுக க்ளிம்ப்ஸ் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், காருக்குள் ஃபாரின் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துக் கொண்டே பாம் வைத்து கல்லறையில் இருந்தவர்களை வெடிக்க வைத்து வேட்டையாடும் காட்சியில் யஷ் நடித்த நிலையில், இதற்கு பெயர் பெண் வெறுப்பு இல்லையா என கசாபா படத்தின் இயக்குநர் தக்க தருணம் பார்த்து விட்டு விளாசி இருக்கிறார்.

லேடி இயக்குநருக்கு அட்டாக்: டாக்ஸிக் என படத்தின் டைட்டிலை வைத்து விட்டு, நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள யஷ் படத்தில் இப்படியொரு மோசமான ஆபாச காட்சியை வைத்தது ஏன் என்றும் அதனை புரொமோட் செய்து விளம்பரப்படுத்தி பிசினஸ் பார்ப்பது என்ன மாதிரியான மனநிலை என்றும் நெட்டிசன்கள் கீது மோகன் தாஸை கழுவி ஊற்றி வருகின்றனர். சுதா கொங்கராவை பார்த்து கத்துக்கோங்க என்று பராசக்தி படத்தையும் ரெஃபரன்ஸ் ஆக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X