நித்யா மேனன் மட்டுமில்லை.. என்ன இன்னொரு நடிகையுமா? அப்போ அது கன்ஃபார்ம் தான் போல!

சென்னை: நடிகை நித்யா மேனன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட் மற்றும் ரப்பர் நிப்பல் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை ஷாக் ஆக்கி இருந்தார்.

புதிய படத்தின் புரமோஷனா? அல்லது நித்யா மேனன் கர்ப்பமாகி விட்டாரா? என கேள்விகள் கிளம்பின.

இந்நிலையில், இன்னொரு பிரபல நடிகையும் அதே போஸ்ட்டை போட்டுள்ள நிலையில், ரசிகர்கள் அப்போ அந்த விஷயம் தான் என்பதை கன்ஃபார்ம் செய்து விட்டனர்.

ஷாக் கொடுத்த நித்யா மேனன்

ஷாக் கொடுத்த நித்யா மேனன்

திடீரென எந்தவொரு முன் அறிவிப்புமின்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நித்யா மேனன் பிரெக்னன்ஸி டெஸ்ட் கிட் போட்டோவை ஷேர் செய்து இனிதே ஆரம்பம் என சந்தோஷமான செய்தியை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் நித்யா மேனன் எப்படி கர்ப்பமானார். அவரது காதலர் யார்? என்றெல்லாம் கேள்விகளை கிளப்ப ஆரம்பித்தனர்.

பட புரமோஷன்

பட புரமோஷன்

நித்யா மேனன் அப்படியெல்லாம் செய்ற ஆள் கிடையாதுங்க இது கண்டிப்பா புதிய படத்துக்கான புரமோஷன் தான் என ஏகப்பட்ட ரசிகர்கள் ட்வீட் போட்டு வந்த நிலையில், தற்போது அதுதான் உண்மை என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது. இன்னொரு பிரபல நடிகையும் அதே போஸ்ட்டை ஷேர் செய்து சஸ்பென்ஸை உடனடியாக உடைத்து விட்டார்.

பார்வதியும் போட்டுருக்காரு

பார்வதியும் போட்டுருக்காரு

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷோபனா மட்டுமின்றி தனுஷின் மரியான் படத்தில் நடித்த பார்வதி மேனனும் அப்படியொரு போஸ்ட் போட்டுள்ள நிலையில், இது கண்டிப்பாக படம் தான் என்பதை ரசிகர்கள் உறுதி செய்தனர். மேலும், அது எந்த படம் என்கிற தகவல்களும் கசிந்துள்ளன.

வொண்டர் உமன்

வொண்டர் உமன்

ஹாலிவுட்டில் கால் கடோட் நடிப்பில் வெளியான வொண்டர் உமன் எனும் டைட்டிலிலேயே கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கும் விஷயங்களை வைத்து உருவாகி உள்ள புதிய படமான வொண்டர் உமன் படம் குறித்த அறிவிப்பை தான் தற்போது இந்த இரு நடிகைகளும் வெளியிட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

பிரபலங்களே கேள்வி

பிரபலங்களே கேள்வி

நித்யா மேனன், பார்வதி மேனன் உள்ளிட்ட நடிகைகள் இந்த அறிவிப்பை வெளியிட்டதுமே ஸ்வரா பாஸ்கர், சின்மயி, ரிமா கலிங்கல் உள்ளிட்ட பல பிரபலங்களே சந்தேகத்துடனே என்ன நீங்க கர்ப்பமா என கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், இரு நடிகைகளின் போஸ்ட்டை பார்த்ததும் அது படத்தின் புரமோஷன் தான் என்பது தெரிய வந்தது.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

அஞ்சலி மேனன் இயக்கத்தில் கடந்த 2014ல் வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் கடைசியாக பார்வதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்து இருந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து இருவரும் ஒன்றாக இணைந்து வொண்டர் உமன் படத்தில் நடித்து வருகின்றனர். அதன் சூட்டிங் கோழிக்கோட்டில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தங்கலான் படத்தில்

தங்கலான் படத்தில்

நடிகை பார்வதி பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வரும் நிலையில், அதே சமயம் மலையாளத்தில் உருவாகி வரும் வொண்டர் உமன் படத்திலும் கர்ப்பிணியாக நடித்து வருகிறார். சமந்தா வாடகைத்தாயாக யசோதா படத்தில் நடித்துள்ள நிலையில், தொடர்ந்து நடிகைகள் கர்ப்பவதியாக நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X