Nithya Menen Net Worth: 35 வயதினிலே.. பர்த்டே பேபி நித்யா மேனனின் பேங்க் பேலன்ஸ் எவ்ளோ தெரியுமா?
சென்னை: பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நடிகை நித்யா மேனன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சோபனாவாக கடந்த ஆண்டு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நித்யா மேனன்.

இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை நித்யா மேனன் புதுப் படங்களுக்கு வாங்கும் சம்பளம், சொகுசு பங்களா, கார் உள்ளிட்ட சொத்து விபரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

35 வயசு:
தபு நடிப்பில் வெளியான ஆங்கில மொழி படமான ஹனுமன் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக 10 வயதில் சினிமாவுக்கு வந்த நித்யா மேனன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1988ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி பெங்களூருவில் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர் நித்யா மேனன். 2006ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 7 ஓ கிளாக் படத்தில் அறிமுகமான நித்யா மேனன், அப்படியே அடுத்து மலையாளத்தில் ஆகாச கோபுரம் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறினார்.
நானியின் அலா மொடலைண்டி படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான நித்யா மேனன் தமிழில் சித்தார்த்தின் நூற்றேன்பது படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். தென்னிந்திய நடிகையாக வலம் வந்த நித்யா மேனன் மிஷன் மங்கள் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.

சோபனா போல ஒரு தோழி:
மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 2, விஜய்யுடன் மெர்சல் என நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தமிழில் நடித்து வரும் நித்யா மேனன் கடந்த ஆண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது.
தாய்க்கிழவின்னு கிண்டல் பண்ணாலும், கடைசியா தேன்மொழி, பூங்கொடின்னு தனுஷை உருகி பாட வைத்து விடுகிறார் 'சோபனா' நித்யா மேனன். இப்படியொரு தோழி நமக்கும் கிடைக்காதா என இளைஞர்கள் ஏங்கும் அளவுக்கு படு யதார்த்தமாக நித்யா மேனன் நடிப்பு இருந்த நிலையில், தான் அந்த படத்திற்கே பெரிய வெற்றி கிடைத்தது என்பதை யாருமே மறக்க முடியாது.

சம்பளம்:
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகும் கோலிவுட்டில் வரிசையாக படங்களில் நித்யா மேனன் கமிட் ஆகவில்லை ஆங்கிலத்தில் வொண்டர் உமன் படத்தை பண்ணினார். மலையாளத்தில் கொலாம்பி, ஆறாம் திருக்கல்பனா படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் அப்பாவின் மீசை என்கிற படத்தில் நடித்து வருகிறார். புதுப்படங்களுக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.
சொத்து மதிப்பு:
தென்னிந்தியாவில் பல இடங்களில் நிலங்களை வாங்கிப் போட்டு இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ள நித்யா மேனன் குடும்பத்துடன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய வீட்டில் தான் வசித்து வருகிறார் என்கின்றனர். பெங்களூரு மற்றும் கேரளாவிலும் அவருக்கு தனி வீடுகள் உள்ளதாக கூறுகின்றனர்.
சொகுசு கார்களை பொறுத்தவரையில் BMW X1 M Sport மற்றும் Audi Q5 கார்கள் உள்ளன. விளம்பரங்கள், வெப்சீரிஸ்கள், என மாதத்துக்கு 26 லட்சம் வரை சம்பாதித்து வரும் நடிகை நித்யா மேனனுக்கு ஒட்டுமொத்தமாக 2.8 மில்லியன் டாலர்கள் அதாவது 20 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











